பக்கம்:சாமியாடிகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

சு. சமுத்திரம்

கொண்டாள். நேத்து ராத்திரி. சித்திக் சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஒப்பித்தாக வேண்டும். இல்லாட்டா நம்ம விவகாரத்த சித்தி அவுத்து விட்டுடுவாள்.

என்றாலும் எதிர்கால அலங்காரியாய் ஆவதற்குரிய அத்தனை தகுதிகளும் தன்னிடம் இருப்பதுபோல், லீலாவதி சாமர்த்தியமாகப் பேசினாள்.

"அப்படிச் சுத்து. இப்படிச் சுத்துன்னு சொல்லேன் சித்தி. இதுக்குப் போயி ஏன் எருமைமாடுன்னு ஒரு வாயில்லா சீவன வையுறே. இதோ பார். நல்லாத்தானே சுத்தியிருக்கேன். நல்லா இருக்கதை தலையாட்டித் தான் சொல்லுவே. வாயால சொல்ல மாட்டே ஆமா ஒங்களுக்குத் தெரியாதா... நம்ம ராமையா பெரியய்யா மவனுக்கும் பழனிச்சாமி மாமா மகள் கோலவடிவுக்கும் கல்யாணம் நடக்கப் போவுதாமே. ரெண்டு வீட்லயும் தீர்மானம் செய்தாச்சாம். இனிமே. கை நனைக்க வேண்டியதுதான் மிச்சமாம்; சித்தி இந்தப் பீடியாவது நல்லா இருக்குதா. சித்தி."

"நான் சொல்லிக் கொடுத்ததாச்சே. நல்லா இல்லாம இருக்குமா..."

"என்ன சொன்ன. கோலவடிவுக்கும் அக்னி ராசாவுக்குமா. இருக்காது."

"ஏன் இருக்காது. கோலவடிவுக்கு அறுபது பவுன் நகை செய்திருக்கு. முப்பதாயிரம் சருள் கொடுப்பாங்க. அக்னி ராசாவுக்கு அவரு பங்குக்கே மூணுகோட்டை விதப்பாடு இருக்குது. ராமையா. காத்துக்கருப்பன் குடும்பத்துல பெரிய ஆளு. பழனிச்சாமி மாமா கரும்பட்டையான் கூட்டத்துல முதல் தல. ஏன் கூடாது."

"எப்படி இருந்தா எனக்கென்ன.. இருக்காட்டா எனக்கென்ன. கொடுப்பார் இஷ்டம். கொள்ளுவார் இஷ்டம். ஆனாலும்."

எல்லாப் பெண்களும், ஆச்சரியப்பட்டபோது, சந்திரா கத்திரித்த இலையைக் கீழே போடாமலே யோசித்தாள். கோலவடிவு மேல் அவளுக்கு ஆயிரந்தான் கோபம் இருந்தாலும் அவளை அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/92&oldid=1243530" இலிருந்து மீள்விக்கப்பட்டது