பக்கம்:சாமியாடிகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

93

சினிமாவுல ஒரு சம்பவத்தக் காட்டினாத்தான் நமக்கு அழுக வரும்.அப்பவும் கோபம் வராது. து."

எல்லாப் பெண்களும் ரஞ்சிதத்தைச் சங்கடமாய்ப் பார்த்தபோது, தாயம்மா, ரஞ்சிதம் பேசியதை வழி மொழிந்தாள்.

"ரஞ்சிதம். அடுத்த சாதியா இருந்தாலும் அவள் சொல்லுறது நூத்துல ஒரு வார்த்த. நாம் எதுக்காவ போடு வண்டல கொடுக்கணும். ஏசெண்டு எதுக்காவ பழுத்த இலய கொடுக்கணும். நல்ல பீடிய கழிக்கனும். கூலிய எதுக்காவ குறைக்கணும்."

"இந்த பாரு. கம்மா கே.பி. சுந்தரம்பா மாதிரி பாடிக்கிட்டே இருக்காத கேட்கணுமுன்னா ஏசெண்டு கிட்ட கேளு. நாங்களும் ஒனக்கு சப்போர்ட்டு செய்யுறோம்.... அவன் பண்றதும் அக்கிரமந்தான்."

ரஞ்சிதம் ஆனந்தப்பட்டாள். மகிழ்ச்சி தாள முடியாமல், பிடித்தட்டில் மேளம் அடித்தாள். பிறகு அழுத்தம் திருத்தமாகக்

கேட்டாள்.

"ஓங்களுக்கு அந்த பால்யாண்டி ஏதாவது ஒரு வகையில உறவு. அதனால யோசனை வரும். அதனால், நானே மொதல்ல கேக்கேன். அப்புறம் நீங்க பேகங்க அலங்காரியம்மமா எதுக்கு எழுந்து நிற்கீக."

"எங்க வீட்டுக்காரர் வயலுல இருந்து வந்திருப்பாரு. பச்சக் குழந்தை மாதிரி பசில துடிப்பாரு. அவரு துடிச்சால் என்னாலதான் பொறுக்க முடியுமா போயி சோறு போட்டுட்டு வாறேன். ஏய் லீலாவதி சோலி முடிஞ்சுட்டு. எழுந்திரு."

அலங்காரியும், லீலாவதியும், போய்க் கொண்டிருந்தபோது தாயம்மா வர்ணனை கொடுத்தாள்.

'ஆடு நனையுதேன்னு ஒநாய் கவலைப்பட்டுதாம். புருஷனுக்குல்லா சோறு போடப் போறாளாம். நல்லா போட்டாளே. கள்ளப் புருஷன் கிட்ட."

"எந்தக் கள்ளப் புருஷன். எத்தனையோ..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/95&oldid=1243534" இலிருந்து மீள்விக்கப்பட்டது