பக்கம்:சாமியாடிகள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

சு. சமுத்திரம்


"என்ன ரஞ்சிதம் இப்டி பண்ணிட்டே..? பரவாயில்ல. பீடியைவிட பூவைத் தொடுறது நல்லதுதான். ஆனாலும் இப்படித் தனி ஆளாய் போனபிறகும். எப்பவும் குளிச்சது மாதிரியே. ஒன்னால எப்படித்தான் இருக்க முடியுமோ. ஒன்னை மாதிரி சுத்தம் எவளாலயும் முடியாது ரஞ்சிதம்."

"நான் சுத்தமாய் இருக்கதுதான் ஒங்களுக்குப் பெரிசா தெரியது. பீடி ஏசெண்ட் பால்யாண்டி அசுத்தமாய் பேசினது, ஒரு விஷயமாகப் படல. என்ன.."

"நானும் கேள்விப்பட்டேன் ரஞ்சி."

"Η ஞ் சிதம்.”

"கேள்விப்பட்டேன் ரஞ்சிதம். அந்தப் பய ஒன்னை ரொம்ப அவமானமாப் பேசிட்டானாமே. அலங்காரிய வச்சிக்கிட்டு இருக்கவன். அந்தப் பன்னாடைப் பயல்கிட்டே கெட்ட வார்த்தைய தவிர வேற எதையும் எதிர்பார்க்க முடியாது. சரி. விட்டுத் தள்ளு. கழுதய."

“கழுதய விட்டுத் தள்ளிடலாம். ஆனால் ஒரு வயசுக்கு வந்த பெண்ண. அதுவும் ஊருல மைனாரிட்டி சாதில இருக்கிற என்னை வாடி போடின்னும் தாசின்னும் பேசுவதை எப்டி விட முடியும்."

"அவன் கிடக்கான்."

"ஒங்க தங்கை கோலவடிவ சும்மா கதாநாயகின்னு சொன்ன துக்கே என்ன குதி குதிச்சீங்க.. ஆனால் என்னை அவன் அவமானமாய் பேசுவதை சாதாரணமாய் எடுத்துக்கிட்டிங்க. என்ன பிரண்டு நீங்க?"

"சரிம்மா. தப்புதான். என்ன நடந்ததுன்னு சொல்லு.?"

"சொல்லுதேன். ஒங்க கிட்டே சொல்லி. எதுவும் ஆகப் போறதுல்லே. யார்கிட்டயாவது ஒருத்தர் கிட்டே சொல்லாட்டா என் தலையே வெடிச்சுடும் போலிருக்கு, அதனால சொல்லுதேன். அப்ப ஒங்களுக்கும் துளசிங்கத்துக்கும் ஏற்பட்ட சண்டையில நீங்க என்னை ரயில்வே கேட்டுல வச்சு சினிமாவுக்குக் கூப்புட்டதை காரணமா வச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/98&oldid=1243538" இலிருந்து மீள்விக்கப்பட்டது