பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

சாய்ந்த கோபுரம்


அகஸ்டஸ் சீசரின் அகண்ட சாம்ராஜ்யக் கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்த இடம் அது. ஜெகமஞ்சப் போரிட்ட ஜுலியஸ் சீசரின் அரசியல் அரியாசன மேறிய இடம் அது. சட்டத்தைத் தந்த ஜஸ்டீனியன் (Justinian the law Giver) என்ற நிபுணன் சட்டங்களை உருவாக்கித் தந்த தாயகம் அது. நமது தளபதி , பன்னீர்செல்வத்தைத் தாங்கிச் சென்று விமானத்தின் பெயரான ஹனிபால் என்ற வீரன் அல்ப்ஸ் மலையுச்சியிலேறி எதிரிகளை விரட்டிய இடமும் அது. ஆளும்நேரம் போக மற்ற நேரங்களில் துறவிபோல் வாழ்ந்த மார்க்கஸ் அரேலியசின் மணிமகுடம் மின்னிய மண்டலமும் அது. இயேசுவின் கொள்கைகளை உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு உயர்ந்த விலைக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த மொத்த வியாபாரிகள் என்ற போப்பாண்டவர்கள் வீற்றிருந்த இடம் அது. பரமபதம் வேண்டிய பக்தர்கள் முதல் பாராளு மன்னர்கள் வரை சிரம் வணங்கித் தம் சேவடி பனிய மதத்தலைவர்கள் மன்பதையின் நெஞ்சைப் பிளந்து கொண்டிருந்த கொடுமைகளுக்குக் கோரஉருவம் தந்துகொண்டிருந்த இடம் தீப்பற்றி எரியும் போது வீனையை வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் வாழ்ந்த இடம் அது. தாயை, தங்கையை, சிற்றன்னையை, செவிலித் தாயை, வேலைக்காரியை, விருந்துண்ண வந்தவரை, பஞ்சணைக்கழைத்த அக்டபர், அக்ரேலியஸ் கயல் போன்ற சீலமில்லா வேந்தர்கள் நடமாடிய இடம், அது சோயாவிலாந்தைத் தன் வசப்படுத்தி, மஞ்சூரியாவை மடக்கி, மஞ்சுகோலை யடக்கி கீழ்க்