பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

51


ரத்தில் நமது சுதந்திரக்கொடி பறக்க வேண்டும். அயல் நாட்டார். கொடி அகற்றப்பட்ட வேண்டும். நம்மை எவ்வளவு மதியீனர்கள் என்று நினைத்திருந்தால், எவ்வளவு பலஹீனர்கள் என்று நினைத்திருந்தால், அயல் நாட்டார். இங்கே ஆதிக்கம் கொள்ள முடியும்? அகில உலகாயுதம் பேசுகின்றனர். மடையர்கள் அகில உலக மக்களும் ஒரே நாகரிகம் ஒரே பண்பு, ஒரே பழக்க வழக்கம், ஒரேமொழி, என்ற முறையில் ஒன்றாகட்டும், நாமும் ஒன்றாவோம். 200 கோடி மக்கள் 92 அாசுகளாகப் பிரிந்திருக்கும் போது நாம் ஏன் பிரிந்திருக்கக் கூடாது. மற்றவரை அடிமைப்படுத்தும்போது ஆன்மார்த்திகத்துறையிலே ஒற்றுமை பேசுவது, மற்றவருக்கு அடிமைப்பட்டிருக்கும்போது அரசியல் துறையிலே புரட்சி நடத்துவது போன்ற நிலையை இன்னும் வளரவிடக்கூடாது அதிகம் பேச நேரமில்லை. ஒற்றர்கள் வருவார்கள். இந்நேரம் மாளிகைக்குச் செய்தி எட்டிருக்கும். இதுவரை சொன்னதை நினைவில்வைத்து நடந்துகொண்டு இதாலியின் விடுதலைக்காகப் போரிடவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்” என்று சொல்லி முடித்தான்.

அடக்குமுறை

இத்தாலி திடீரென்று திப்பற்றி எரிந்ததைப் போல ஒருபக்கம் மிலான் சர்க்கார், மற்றொரு பக்கம் ரோம் சர்க்கார் இன்னொரு பக்கம் நேபிள்ஸ் சர்க்கார் கொதித்தெழுந்தன. பொதுக்கூட்டம் அதி-