பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

59



சிங்காதனத்தான் இட்ட கட்டளை இது. மாஜினிக்கு மிகுந்த சோதனைக்காலம். எனினும் அவன் தளரவில்லை. அந்த இடத்தை விட்டு ஸ்வீட்ஜர்லாத்துக்கு வந்து சேர்ந்து விட்டான்.

சார்லஸ் ஆல்பர்டுக்கும், மாஜினிக்கும் நடந்த கடிதப் போக்கு வாத்து, மாஜினி நாடு கடத்தப்பட்டது, ஆகிய நிகழ்ச்சிகள் சார்டீனியன் படைகளுள்ளேயே பெரும் பரபரப்பை உண்டாக்கிவிட்டது. அதனால் படைகளுக்குள்ளேயே குழப்பம். கை கலப்பு. அதன் முடிவு படை வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். பலர் உயிரோடு குழிதோண்டிப் புதைக்கப்பட்டனர். பலர் படையை விட்டே ஓடி விட்டனர். சார்டீனியன் சர்க்கார் ஆட்டங்கண்டது. இவ்வளவுக்கும் காரணம் மாஜினிதான் என்று குற்றஞ் சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

நீதி மன்றம்

குற்றவாளி மாஜினி - நீதிபதிகள்

நீதி : இந்தக் கடிதம் நீர் எழுதியது தானே?

மாஜி : ஆம்.

நீதி : சார்டீனிய அரசர், மேன்மை தங்கிய மன்னர், சார்லஸ் ஆல்பர்ட் அவர்களை மரியாதையில்லாமல் 'அன்புள்ள' என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். அது ஒரு குற்றம்.