பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

65



இந்தத் தோல்வியை அடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கைக்கு ஒரு உரைகல்லாக உபயோ கித் துக் கொண்டான். இதனால், அணு குண் டு போன்ற பயங்கரமான எழுத்து வன்மையோடு (Europe Centrale) யூரப் சென்ட்ரேல் என்ற பத்திரி கையை ஆரம்பித்தான். அதன்மூலம் சேவாய் நகரைப் பிடிக்க வேண்டுமென்ற ஆவேச உணர்ச்சியை ம. க் க ளு க் கு உண்டாக்கின்ை. அந்த எழுத்து ஈட்டிகள் மக்கள் ஒவ்வொருவருடைய சுதந்திர எண்ணத்தைச் சுருக்கெனத் தாக்கியது. அதைப் படித்த ஒவ்வொருவனும், பலம் பொருக்கிய, பல நாட்கள் போர்ப்பழக்கம் பெற்ற, பல நாடுகளை வென்ற போர்வீரனைப் போல் மாறிவிட்டான், தலைவன் கட்டளைக்கு எதிர் நோக்கியிருந்தனர் போர்வீரர்கள். மலைக்குகை, மரப்பொந்து, அடர்ந்த செடிகள், ஆற்முேரம், மலைச்சரிவு, மாளிகையின் சிங்காரத் தோட்டங்கள், எங்கும் போர் வீரர்கள். அவர்கள் அயர்ந்துவிட்டால், போர்ப் பொறுப்பைத் தங்கள் தோளில் மாற்றிக்கொள்ளக் கொரில்லாப் படைகள். கட்டளையிட வேண்டிய த ல வ னே அங்கே காணுேம், ஆனால் விசையை முடுக்கிவிட்ட யந்திரம்போல் வேலைசெய்து கொண்டிருக்கின்றன. படைகள். எவ்வளவு கீழ்ப்படிதல் 1 எவ்வளவு நேர்த்தியான ஒற்றுமை ! என்றும் காதை ஆவேசம்! இந்த நிலையில் 1834ல் ஒரு துப்பாக்கி வேட்டுக்கூடக் கிளப்பாமல் சேவாய் நகரம் பிடிபட்டது. மறுநாள் காலை சேவாய் நகரப் பாராளு