பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

சாய்ந்த கோபுரம்



மன்றத் தலைவாயிலிலே இத்தாலிய இளைஞர் இயக் கத்தின் சுதந்திரக்கொடி பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சி பல வெளி வல்லரசுகளுக்குப் பயத்தை உண்டாக்கியது. யாரோ ஓர் இளைஞன் இவ் ண்ணம் செய்வதை நாம் ஆமோதித்தால், அதே நோய் நம் காட்டில் பரவாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? கூடாது. இதைக் கண்டிக்க வேண்டும் என்று பல நாடுகள் தங்கள் பேணுவையும், மைக்கூட்டையும் கையில் எடுப்பதற்குள், கிலமையைச் சரியாக விளக்கவும், வெளி நாடுகள் தங்களைப் பற்றிக் தவறுக நினத்துக் கொள்ளாதிருக்கச் செய்யவும், (Young Europe) ஐரோப்பிய இளைஞர் என்ற கழகம் ஒன்றை ஏற்படுத்தினன். இதன் நோக்கம், சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் என்பவைகள், இதை யொட்டி (Young Switzsdland) áv SL Ni @r Í 5 D&m Gi என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் தான் ஆங்கிலம் பயின்றாலன்றி. ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இத்தாலியின் நிலைமையைத் தெளிவாக க் தெரிவிக்க முடியாதென்று 1837-ல் மாஜினி லண்டனுக்குச் சென்று ஆங்கிலம் பயின்று ஜனநாயகப் பிரியர்களான அந்த ஆங்கிலேயர்களுக்குப் பல கட்டுரைகளை வெளியிட்டான். அதைப் படித்த ஆங்கில நாட்டார் தாங்கள் அது வரை மாஜினியின்பால் கொண்டிருந்த தவறான