பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

73



மார்க்‌ஸின் தலைமையுரை முடிந்தது. இதுவரை பல கூட்டங்களிலே பேசியிருக்கின்றார். மார்க்ஸ் இவ்வளவு சூடான வார்க்கைகளை அவர் எப்போதும் உபயோகிக்கதில்லை. எவ்வளவு மனவேதனையிருந்தால் இப்படி நெருப்பையள்ளிக் கொட்டியிருப்பார் அந்த தள்ளாத வயதினர் : இப்படிப் பேசி எறியீட்டிகள்போல் கிளம்பினர் மக்கள். இந்தச் செய்தி இத்தாலிக்கு எட்டிவிட்டது.

புரட்சி

"மா ஜி னி யி ன் மரணதண்டனையை ரத்து செய். வீரனை விடுதலே செய், வீண் விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்ளாதே. நாட்டுக் கசப்பை நாவால் சுவைக்காதே. ரத்தவெறிகொண்டலையாதே. கித்தாப்பு மடியாதிருக்க ரத்தாபிஷேகம் செய்யாதே. நாயினும் கடையர்கள் மக்கள் என்றெண்ணாதே. மாஜினியின் மரணதண்டனையை நிறைவேற்றி மக்கள் விரோதத்தைத் தேடிக் கொள்ளாதே. மரணதண்டனையை நிறைவேற்றி அவன் உடல் ரத்தம் குளிர்ந்து போவதற்குள் மன்னன் தலை மண்ணில் உருளும். அவன் உடல் தூக்கு மரத்திலிருந்து கீழே இறங்குவதற்குள் வேந்தன் சவம் சுடலை நோக்கிச் சென்றுவிடும். ஆத்திரத்தால் அறிவை இழந்து விடாதே. அபாயத்தை விலை கொடுத்து வாங்காதே. அற்பர்கள் பேச்சைக் கேட்டு, சாம்ராஜ்யக் கெளரவத்தைக் காப்பாற்ற, வெட்டி வீரம் பேசி மக்கள் ஆவேசக் கட