பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சாய்ந்த கோபுரம்



லில் நீந்தாதே. ஆழம் தெரியாமல் காலவிட்டு அவஸ்தைப்படாதே. மாளிகையின் மண் குதிரைகளை நமபி ஆற்றில் இறங்காகே. எச்சரிக்கை, எச்சரிக்கை" என்று கிளர்ச்சி பூகம்பம் எழுந்து விட்டது. இத்தாலிய நாடே அதிர்ந்தது, கடலுக் கப்பாலான நாடுகளிருந்து கண்டனக் கணைகள் வந்து குவிந்த வண்ணமிருந்தன.


'சட்டம் சொல்கிறது , இது சர்க்கார் தரப்புக்கூச்சல். "ஆல்ப்ஸ் மலையா அசைக்க முடியா மலிருக்க? : "அடித்து எழுது சட்டத்தை, இது மக்கள் கசப்பின் 'மன்னன் உத்திரவு' , இது மாளிகைக்குரல். 'மன்னன் மக்கள் பிரதிநிதி'...இது மக்கள். 'அரசன் குடிகளின் தாய்’-இது அரச பாம்பரையினர் ஆவேசக்குரல், அரசன் குடிகளின் காயுமல்ல, கந்தையுமல்ல மக்கள் அயர்ந்து தூங்கும் நள்ளிரவில் உருவிய வாளோடு ஊர் சுற்.றும் காவலன். சேமநிதிக்கோர் வைப்பு. அவர்கள் அறிவெனும் நீர்ப்பாசன வசதிக்கோர் அணையில்லாத ஆறு. மன்டலத்தைப் படைத்தவனல்ல மன்னன். மகள் படைத்தனர் மன்னனே. மாளாத பெருமையளித்தனர். அருளாளனே என்றனர். அலட்சியமாக ஆட்டினான். தலையை. போரளனே : என்றனர். பெருமை கொள்ளவில்லை. தவறாகப் பேடிகள் என நினைத்தான் மக்களே. இன்று எமது வழிகாட்டியை, இலக்கியக்கர்த்தாவை, சுதந்திர வீரனை, தன்னலமற்ற தியாகியை, உயிரைத் துச்சமென மதிக்க உத்தமன், புரட்சி பல கண்ட-