பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

77



செய்தான். ஆயினும் மன்னன் விவேகத்தை வரவழைத்துக்கொண்டான். இன்று தன்னை ஏவி விடுபவர்கள் நாளை வரப்போகும் ஆபத்துக்குத் தலைகொடுக்க மாட்டார்கள். ஒரு வேட்டு சத்தங் கேட்டவுடன் ஒன்பதுகாதம் ஓடி யொளிவார்கள். இவர்கள் பேச்சைக்கேட்டு இன்னல்பட்டு, இறப்பின்வாயில் விழுவதைவிட, மாஜினியை மன்னித்து, மக்கள் அபிமானத்கைப் பெற்று மன்னனாகவே வாழ்வது மேல் என முடிவு செய்து கொண்டான். பிறகு பலர் அவனைக் கெடுக்க முயன்றார்கள். எனினும் அவன் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. தண்டனை நிறைவேற்றுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு.

விடுதலை

'மாஜினிக்கு விடுதலை' என்று கொட்டை எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பலகை மன்னன் மாளிகை முன்பாகத் தொங்கவிடப்பட்டது. விடுதலை உத்திரவை ஏங்கிச் சிறைக் கோட்டம் நோக்கி ஓடுகிறான் ஓர் குதிரை வீரன். தன்னை எங்கே கொன்று விடப் போகின்றார்களோ என்ற பயத்தால், மாஜினிக்கு விடுதலை,' 'மாஜினிக்கு விடுதலை,' என்று அவனே தெருவெல்லாம் கத்திக்கொண்டு ஓடுகிறான்.

மக்கள் பரவசம்

'மாஜினிக்கு. விடுதலை,' என்றவுடன், உண்மையாகவா என்றனர் மக்கள். உண்மையாக மாத்திரமல்ல, உறுதியாக என்றது அரசாங்கம். கொண்-