பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சாய்ந்த கோபுரம்



ஏமாற்றத்தோடு திரும்புபவர்களைப்போல் திரும்பினான் மாஜினி. அதுவரை தான் நினைத்துக்கொண்டிருந்த கருத்துக்களுக்கு மிக சமீபமாக இருக்கும் அவருடைய கருத்துக்களும் என்று எண்ணினான். முற்றிலும் ஏமாறவில்லை. ஆனால் ஒரு சில கொள்கைகளே மாறுபட்டன. முழு சந்தோஷத்தோடு திரும்ப முடியவில்லையே தவிர, முற்றிலும் ஏமாற்றத்தோடு திரும்ப வில்லை. அதுவரை ஓரளவுக்கு அமைதி கொண்டான்.

மதம் மனிதனுக்கு அபினியைப் போன்றது. ஆகையால் அதை ஒழிக்கவேண்டுமென்பதும், பொருளாதாரத்துறையில் வாணிபம் முதல் கைத்தொழில் வரையுள்ள எல்லாப் பணப்பெருக்கச் சாதனங்களும் அரசாங்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கவேண்டும் என்பதும் மார்க்ஸின் கருத்து. ஆனால், மாஜினியின் கருத்து சற்று மாறுபட்டது. சமுதாயத்துறையில் ஆண்டவன் அனைவரையும் ஒன்றாகப் படைத்தான் என்பதும், அரசியல் துறையில் தன் சொந்தநாட்டை முதலில் கவனிக்கவேண்டுமென்பதும், பொருளாதாரத்துறையில், வாணிபமும், உற்பத்தியும், தொழிலும் சில தனிப்பட்டவர்களிடத்திலும், சில அரசாங்கத்திடமும் இருக்கவேண்டுமென்பது மாஜினியின் கருத்து.

எந்தக் கொள்கையின் பேராலும் ஒன்றுபடாத மக்கள், ஆண்டவன் பேரால் ஒன்றுபடுத்திவிட முடியும் என்று திடமாக நம்பினான் மாஜினி. அந்த ஆண்டவன் பேரால் செய்யப்படும் பல அக்ரமங்களை