பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சாய்ந்த கோபுரம்



வர்களுக்கு ஒப்படைத்து விட்டு வேதனையோடு வெளியே வருவது வழக்கமாய்விட்டது. இத்தாலிய நாடும் இதற்கு விதிவிலக்கா என்ன? ஆகவே அங்கும் அன்றும் இந்தச் சுயநலப்புலிகள் இருக்கித்தான் செய்தார்கள்.

முடிவு

கருஞ்சட்டைப் படையை நிறுவி, இததாலிய இளைஞர்களின் எண்ணத்தை ஒருமுகப்படுத்தி, செயலுக்குத் தூண்டிய சிந்தனைக் கடல், இத்தாலியைக் காத்த இணையற்ற வீரன் என்று எல்லா நாட்டாாாலும் புகழப்பட்டவன் மாஜினி. மாற்றாரின் கொடுமைகளைக் களைந்து, மக்களை மக்களாக வாழவைக்க எண்ணிய மாஜினி, கருஞ்சட்டை வீரன். அவன் தனது கருத்துக்கள் கனிந்து இத்தாலி எழில் முகங்கொள்ளும்வரை கருஞ்சட்டை யணியத் துணிந்த கர்மவீரன் அவன். தான் கொண்ட கவலையொழிந்த நன்னாளைக் கண்டபிறகே இறக்க வேண்டுமென்று நினைத்த புரட்சிவேந்த ன். 1872ம் ஆண்டு மார்ச்சு மாதம் 10-நாள் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரச் சரிவின் சமாதியிலே விழிக்காத தூக்கத்திலாழ்ந்துவிட்டான் அவ்வீரன்.

குமுறிஎழுந்த விடுதலை வேட்கையால் மாஜினி ஆற்றிய செயல்களும். முழக்கிய பேச்சொலியும், திட்டிய கருத்துரைகளும், அந்தச் சாய்ந்த கோபுச்சரிவில் மட்டுமன்று, அடிமைத்தளையை உடைத் தெறியத் துடிக்கும் மக்கள் இதயங்களிலெல்லாம் சங்கநாதம் புரிகின்றன

வாழ்க மாஜினியின் மாசற்ற தியாகத் தழும்புகள்!

வாழ்க கருஞ்சட்டை!! -