பக்கம்:சாவி-85.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.பாலசுப்ரமணியன் ஆசிரியர் ஆனந்த விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600002 தொலைபேசி : 8524054, 8524064 ஃபேக்ஸ் : 91–44-85238.19 தனது 85வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் திரு. சாவியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி ஒரு நூலாக வெளியிட்டிருக்கும் ராணிமைந்தனின் முயற்சி பாராட்டுக்குரியது. நாற்பது வருடங்களுக்கு மேலாக நான் திரு.சாவியை அறிவேன். விகடனில் என்னுடன் சாவி பணிபுரிந்த அந்த நாட்கள் இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கின்றன. பத்திரிகைத் துறை என்பது சாவியின் ரத்தத்துடன் கலந்துவிட்ட ஒன்று. எழுத்து அவருடைய ஜீவன். நகைச்சுவை அவரது உயிர்மூச்சு. இரவு பகல் பார்க்காமல் உழைப்பதற்குத் தயங்காதவர். எடுத்துக் கொண்ட பணி எதுவாக இருப்பினும் அதில் முகம் சுளிக்காமல் முழுமூச்சுடன் ஈடுபடுபவர். சுறுசுறுப்பானவர். 'வயதானாலும் எண்ணத்தில் இளமையானவர் என்பது சாவியைப் பொறுத்தவரை அலங்கார வார்த்தை இல்லை. அவருடன் பழகியவர்களுக்கு இது தெரியும். 85 வயது இளைஞர் சாவி இதே சுறுசுறுப்புடனும், பூரண ஆரோக்கியத்துடனும் தம்முடைய இலக்கியப் பணியைப் ண்டு தொடர வாழ்த்துகிறேன். | ~ డ ஆசிரியர் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/10&oldid=824334" இலிருந்து மீள்விக்கப்பட்டது