பக்கம்:சாவி-85.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஒற்றி எடுத்து குறுக்கே வரும் ரெஃபரியின் - அவர் பெயர் வாங்பக்லி - பனியன் மீது அப்பிவிடுவார். ரெஃபரியின் அந்த வெள்ளை வெளேர் பணியன் மீது படிகின்ற ரத்தம் சூரிய ஒளி போன்ற இரவைப் பகலாக்கும் ஃப்ளட் லைட்' வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிய, இரண்டு பேரும் உண்மை யிலேயே கடும் ஆவேசத்தில் சண்டை போட்டுக் கொள்வ தாகவே ரசிகப்பெருமக்கள் நம்பி விடுவார்கள். திட்டமிட்டபடியே அன்று மாலை ரெஃபரி பனியனில் ரத்தம் அப்பப்பட்டபோது ரசிகர்கள் நரம்புகள் முறுக்கேற கூச்சலிட்டார்கள். கிங்காங் தன் பங்கிற்கு ரெஃபரி மீது பாய்ந்து அவரது பனியனைப் பிடித்திழுத்து சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டார். அவ்வளவுதான். ஸ்டேடியமே அமளி துமளிப் பட்டது. "கிங்காங், பனியனையே கிழித்து விட்டார். உண்மையாகவே இது அசல் சண்டைதான் என்று ரசிகர்கள் பேசிக்கொண்டு போனார்கள். - பணியன் விலை வெறும் எட்டு ரூபாய்தான். ஆனால் அன்று ஆன வசூலோ முப்பத்திரண்டாயிரம் ரூபாய்! கிங்காங் அத்துடன் விட்டுவிடவில்லை. தாராசிங்கைப் பார்த்து 'நாளை உன்னைக் கவனித்துக் கொள்கிறேன் என்று சவால் சண்டைக்கு அழைத்தார். தாராசிங்கும் சவாலுக்கு ஒப்புக் கொள்ள மறுநாள் வசூல் இரண்டு மடங்கு! இப்படி நாளொரு வண்ணமும் பொழுதொரு தினுசுமாய் புதுப் புது உத்திகளைக் கையாண்டு மக்களைப் பைத்தியமாய் அலைய வைத்தார்கள். நாளடைவில் கிங்காங் - தாராசிங் சண்டை பொய்யானது; போலியானது; என்று தெரிந்தும்கூட மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அசல் சண்டை போல் சுவாரசியமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு மேலும் மேலும் குஸ்தி பார்க்கக் குவிந்தார்கள். தமிழ்நாட்டில் முதல் ரவுண்ட் சண்டை முடிந்தது. 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/102&oldid=824339" இலிருந்து மீள்விக்கப்பட்டது