பக்கம்:சாவி-85.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் திட்டமிட்டார் சாவி. காஃபி என்றால் இதுதான் காஃபி என்று அத்தனை பேரும் பாராட்டவேண்டும். மணமும் ருசியும் நாக்கில் சுழல வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. தி.நகர் மங்கேஷ் தெருவில் ஒரு சின்ன இடம் பிடித்து அந்த இடத்தைத் தம்முடைய ரசனைக்கேற்றபடி மாற்றி வடிவமைத்தார். முன்வாசலில் தஞ்சாவூர் ஸ்டைலில் கலை அழகோடு கீற்றுக்கொட்டகை போட்டு, காஃபி பேலஸ் என்று பெயர் வைத்தார். தொடங்கிய முதல் நாளே களை கட்டிவிட்டது. வந்த பெரும் கூட்டம் அந்த காஃபியில் மயங்கி நின்றது. வி.ஐ.பி.க்கள் பலர் வரத் தொடங்கினார்கள். முக்கியமாக - மணியன், சாண்டில்யன், தமிழ்வாணன் போன்ற எழுத்தாளர்களும், ம.பொ.சி. போன்ற அரசியல் வாதிகளும் காஃபி பேலஸ் நோக்கிப் படையெடுத்தார்கள். மற்றும் சிலர் நம்ப சாவிதானே என்று காஃபி குடித்து விட்டுப் பணம் கொடுக்காமலே கணக்கு சொல்லிவிட்டுப் போனார்கள். சாவி அவர்களால் கண்டிப்பு காட்ட முடியவில்லை. கறாராக இருக்கவும் முடியவில்லை. எல்லோருமே நன்கு பழகிவிட்ட நண்பர்கள். ஆதலால் தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டார். தினமும் தவறாமல் வந்து சாப்பிட்டு ஒழுங்காகப் பணம் கொடுத்தவர்கள் பிரபல எழுத்தாளர் சாண்டில்யனும் இன்னும் சிவருமே. சாண்டில்யனும் சாவியைப் போல ரசனை மிக்கவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர். காஃபியோடு சாப்பிட சில அயிட்டங்களும் முக்கியம் என்று நண்பர்கள் வற்புறுத்தவே இட்லி, வடை என்று வழக்கமான அயிட்டங்களையும் கொடுக்கத் தொடங்கினார். பலரும் வருவார்கள். சாப்பிடுவார்கள். கடன் சொல்லி 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/105&oldid=824348" இலிருந்து மீள்விக்கப்பட்டது