பக்கம்:சாவி-85.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மீண்டும் விகடனில்... காஃபி பேலஸ் மூடப்பட்டதும் குடும்பத்தை அழைத்துக் கொண்டு சொந்த ஊர் மாம்பாக்கத்துக்கே போய்ச் சில நாட்கள் தங்கி இருந்தார். கிராம வாழ்க்கை சரிப்பட்டு வரவில்லை. அப்பாவும் தமது பெண்களின் திருமணத்துக்காக வாங்கிய கடனை வட்டியும் முதலுமாய்த் தீர்க்க நிலபுலன்களை விற்று விட்டு சிரம தசையில் இருந்தார். அந்த நிலையில், அப்பாவுக்கு பாரமாக எத்தனை நாள் இருப்பது? கிராமத்தில் இருந்தபடியே கல்கி இதழில் சாவி அவ்வப் போது ஏதாவது எழுதி வந்தார். 'விடாக்கண்டர் என்ற பெயரில் அரசியல் கட்டுரைகள் எழுதினார். அதற்கு முப்பது, நாற்பது என்று சன்மானம் வரும். சாவியின் நிலைமையைப் புரிந்து கொண்டிருந்த கல்கி அவர்கள் சன்மானத் தொகையைத் தாமதப்படுத்தாமல் உதவி ஆசிரியர் ஸோமாஸ் மூலம் தபால் கவரிலேயே வைத்து அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார். - இதற்கிடையில் அப்போது சென்னையில் அமெரிக்கத் தகவல் நிலையத்தில் (யு.எஸ்.ஐ.எஸ்.) பணிபுரிந்து கொண்டிருந்த வ.உ.சி. சுப்பிரமணியம் அவர்களின் (ஆம், கப்பலோட்டிய தமிழனின் மகன்தான்) உதவியால் சாவிக்கு ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தது. *** ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரைகளைச் சரி பார்க்கும் வாய்ப்பு. அந்தக் கட்டுரைகளை வாங்கிக் கொண்டு கிராமத்துக்குப் போய் அங்கே சரி பார்த்து மீண்டும் 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/107&oldid=824352" இலிருந்து மீள்விக்கப்பட்டது