பக்கம்:சாவி-85.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 எனவே அந்த விழாவுக்கு அவரால் போக முடியவில்லை. விழா முடிந்ததும் சாவி அவர்கள் நேராக சாமாவின் வீட்டுக்கே வந்து அந்த அருமையான பட்டாடையை அவருக்குப் போர்த்தி மகிழ்ந்தாராம். இச்சம்பவத்தை சாமா என்னிடம் சொல்லிச் சொல்லி உள்ளம் நெகிழ்ந்தார்." சாமா - சாவி நட்பு அத்தகைய பாசம் மிக்க நட்பாக இருந்தது. ஒவியர் சாமா திருமண விழா ஒன்றில் விகடன் ஆசிரியர் வாசன் அவர்களைச் சந்தித்திருக்கிறார். மறுநாள் சாவியிடம் 'உன் கட்டுரையை வாசன் ரொம்பப் பாராட்டினார். இது ஒரு நல்ல வாய்ப்பு உனக்கு. உடனே வாசன் அவர்களைப் போய்ப் பார்! உன்னை அவர் விகடனுக்கு அழைத்தாலும் அழைப்பார்' என்று சொல்லியிருக்கிறார். 'வாசனே பாராட்டினார் என்ற செய்தி சாவியைத் தூங்க விடவில்லை. மறுநாளே திரு. வாசன் அவர்களைப் பார்க்க ஜெமினி ஹவுஸுக்குப் போய் விட்டார். மாடியிலிருந்து இறங்கி வந்த வாசன் அவர்கள் சாவியை உட்காரச் சொல்லி நீண்ட நேரம் பத்திரிகை சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். 'உன்னை நான் ஒன்று கேட்கிறேன். நாங்க இவ்வளவு பண்ணியும் விகடன் சர்க்குலேஷன், கல்கியைவிடக் குறைவாகவே இருக்கிறதே, இதற்கு என்ன காரணம்?' என்று கேட்டார் வாசன். அப்போது விகடன் சர்க்குலேஷன் ஒரு லட்சம் பிரதி களுக்குக் குறைவாகவே இருந்தது. கல்கியோ ஒரு லட்சத்தைத் தாண்டியிருந்தது. - சாவி தம்முடைய கருத்தைத் தயங்காமல் எடுத்துச் சொன்னார் : "விகடன் பிராமண பாஷையையே அதிகம் 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/110&oldid=824360" இலிருந்து மீள்விக்கப்பட்டது