பக்கம்:சாவி-85.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஆனால், தாம் விகடனில் சேரப் போவதை 'கல்கி அலுவலகத்தில் சில நாட்கள் வரை சொல்லாமலே இருந்தார். வாசன் அவர்கள் சாவிக்கு ஒர் அறிவுரை சொல்லியிருந்தார். 'இப்போது நீ உடனே கல்கியை விட்டு இங்கே வந்து சேர்ந்தால் அது நன்றாக இருக்காது. ஆகவே வேலையை விட்டு விட்டு இரண்டு மூன்று மாதங்கள் சும்மா இரு. அந்தக் காலத்துக்கான சம்பளத்தை நான் கொடுத்து விடுகிறேன். அப்புறம் சேர்ந்து கொள்ளலாம்.' தான் வேலையை ராஜினாமா செய்யப் போவதை கல்கி அலுவலகத்தில் தெரிவிக்காமல் இருப்பது குற்றம் என்பதை உணர்ந்து, சாவி வைத்தியநாதனிடம் தன் மனநிலையையும், முடிவையும் வெளிப்படுத்தினார். கல்கியில் சாவியை வேலைக்குச் சேர்த்து விட்டவர் வைத்தியநாதன் அவர்கள்தான். அவருக்கு சாவியின் இந்த முடிவு மகிழ்ச்சி தரவில்லை. 'உங்களுக்காக நான் எவ்வளவு முயற்சி செய்து இந்த வேலை வாங்கியிருப்பேன் சேர்ந்து பதினொரு மாதங்கள் கூட ஆகவில்லை. இதற்குள் போகிறேன் என்கிறீர்களே?' என்றார். "சம்பளம் போதவில்லை. மேலும் நான் அடிப்படையில் ஒரு ஹ்யூமரஸ் ரைட்டர். கல்கி சற்று சீரியஸ் மெகஸின். என் எழுத்துக்கு கல்கியை விட விகடன் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார் சாவி. திரு. சதாசிவம் அவர்கள் அப்போது வெளியூரில் இருந்தார். 'திரும்பி வர பத்துப் பதினைந்து நாட்கள் ஆகலாம். வந்தவுடன் அவரைப் பார்த்துச் சொல்லி விட்டுப் போங்கள் என்றார் வைத்தியநாதன். சதாசிவம் அவர்கள் சென்னை திரும்பியதும் சாவி அவரைப் போய்ப் பார்த்தார். இதற்குள்ளாகவே திரு.சதாசிவம் அவர்களுக்கு விஷயம் எட்டியிருந்தது. 102

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/112&oldid=824364" இலிருந்து மீள்விக்கப்பட்டது