பக்கம்:சாவி-85.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் 'உனக்கு இங்கே என்ன குறைச்சல்? சரி, நீ விகடனுக்குப் போவதாக முடிவு பண்ணி விட்ட பிறகு நான் என்ன செய்ய முடியும்?' என்று சதாசிவம் வருத்தத்தோடு விடை கொடுத்து அனுப்பினார். 'நான் ஆபீஸில் லோன் வாங்கியிருக்கிற பணத்தில் இன்னும் அறுநூற்று ஐம்பது ரூபாய் திருப்பித் தரவேண்டி இருக்கிறது என்று இழுத்தார் சாவி. 'சிவ... சிவா! நான் அதை அப்போதே மறந்தாச்சு' என்றார் சதாசிவம். 'எவ்வளவு பெரிய மனசு சதாசிவம் அவர்களுக்கு!” என்று சாவி நெகிழ்ந்து போகிறார். ஒரு மாதம் ஆயிற்று. விகடனிலிருந்து எந்தத் தகவலையும் காணோம். அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட கதையாக விகடனை நம்பி கல்கியையும் விட்டாயிற்று. சாவிக்கு பயம் வந்து விட்டது. தன் நிலையை விளக்கி நான் இப்போது திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறேன் என்று வாசன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டார் சாவி. அந்தக் கடிதம் சேர்ந்த மறுநாளே உடனே ஜே.எம்.டி. (ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர்) பாலசுப்ரமணியனைப் பார்க்கவும்: என்று வாசன் அவர்களிடமிருந்து செய்தி வந்தது. மறுதினமே வாசன் அவர்களின் புதல்வர் திரு. பாலசுப்ர மணியன் அவர்களை விகடன் அலுவலகத்தில் சந்தித்து வேலையை ஒப்புக் கொண்டார் சாவி. அன்றே விகடனில் சாவி அவர்களின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமாயிற்று. . 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/113&oldid=824366" இலிருந்து மீள்விக்கப்பட்டது