பக்கம்:சாவி-85.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. முத்திரைக் கதை "எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் வருமானத்தை உயர்த்தி, அவர்களின் சமூக அந்தஸ்தை பெருமைக்குரியதாக்க வேண்டும் என்ற ஆசை சாவி அவர்களுக்குள் எப்போதுமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் பத்திரிகைகள் சினிமா நடிகர்களை மட்டுமே பெரிதாகப் படம் போட்டு அவர்களைப் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளியிட்டு வந்தன. சாவி தினமணி கதிர் ஆசிரியராகப் பதவி ஏற்றதும் தமக்கிருந்த முழு சுதந்திரத்தைப் பயன்படுத்தி எழுத்தாளர்களை மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினார். சினிமா ஸ்டார்களைப் போலவே எழுத்தாளர்களின் புகைப் படங்களைப் பிரசுரித்தார். அவர்கள் எழுதும் கதைகளுக்கு முழுப் பக்க அளவில் வண்ணச் சித்திரங்கள் போடுவது, பொது மேடைகளில் அவர்களை கெளரவிப்பது, கலந்துரையாடல்கள், நேருக்கு நேர் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வது அவற்றைப் பற்றிய புகைப்படக் கட்டுரைகளைப் பிரசுரிப்பது போன்ற புதுமையான விளம்பரங்களைச் செய்தார். இன்று எழுத்தாளர்கள் பொது வாழ்வில் ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துப் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள், பாராட்டப் படுகிறார்கள் என்றால் அதற்கு வித்திட்டவர் சாவி அவர்கள்தான் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஜெயகாந்தன், சோ, சிவசங்கரி, சுஜாதா, கண்ணதாசன் போன்ற பல எழுத்தாளர்களைப் பிரபலமாக்கிய பெருமை 104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/114&oldid=824368" இலிருந்து மீள்விக்கப்பட்டது