பக்கம்:சாவி-85.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 வழக்கம் வெகுகாலம் தொடர்ந்து கொண்டிருந்தது. இலக்கியத்தை இப்படி ஸ்கேல் வைத்து அளக்கும் முறை சாவிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்த வழக்கத்தை மாற்றியாக வேண்டும் என்று பாலசுப்ரமணியன் (பாலு) அவர்களோடு வாதிட்டார். ஒரு நல்ல படைப்பை அதன் தரத்தைக் கொண்டுதான் நிர்ணயிக்க வேண்டுமே தவிர, அதன் நீள அகலத்தைக் கொண்டா மதிப்பிடுவது?’ என்று விவாதித்தார். அதற்கு பாலு அவர்கள் இதில் ஒரு பொதுவான நியாயம் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கதையின் நீளத்துக்கு ஏற்றபடி இவ்வளவு ரூபாய் என்று நிர்ணயித்து விட்டால் வேண்டியவர், வேண்டாதவர் என்ற பிரச்னைக்கே இடமில்லை பாருங்கள். எழுத்தாளர்களை வித்தியாசப்படுத்தாமல் அனைத்து எழுத்தாளர்களுக்கும் ஒரே மாதிரி மதிப்புக் கொடுத்து எல்லோரையும் சமமாகப் பாவிக்க இதைவிடச் சிறந்த வழி வேறென்ன இருக்க முடியும்?' என்று சாவியிடம் திருப்பிக் கேட்டார். சாவி சட்டென்று சொன்னார்: "அப்படியானால் இப்போது திருவள்ளுவர் உயிரோடு இருந்து விகடனில் குறள் எழுதினால் அவருக்கு ஒரு குறளுக்கு இரண்டு ரூபாய்தான் தருவீர்களோ, அப்படித்தானே?" அந்த வாதத்தைக் கேட்டதும் பாலு கண்களை மூடியபடி ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கினார். சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக, 'நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரியென்றே படுகிறது. இலக்கியத்தை ஸ்கேல் வைத்து அளக்கும் பழக்கத்தை இன்றோடு: நிறுத்தி விடலாம். இனிமேல் தரத்துக்கேற்ப சன்மானம் வழங்கும் வழக்கத்தை மேற்கொள்வோம். இது பற்றி வணக்கம் என்று தலைப்பிட்டு நீங்களே அடுத்த இதழில் ஒரு விளக்கம் 106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/116&oldid=824372" இலிருந்து மீள்விக்கப்பட்டது