பக்கம்:சாவி-85.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் எழுதி விடுங்கள் என்று கூறிவிட்டு அடுத்த வேலையை கவனிக்கப் போய்விட்டார். ஏதாவது முக்கியமான சேதியை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமானால் "வணக்கம்' என்ற தலைப்பில் அதை விவரிப்பது விகடனின் வழக்கம். சன்மானம் நிர்ணயிக்கும் திட்டம் மாற்றி அமைக்கப்பட்ட விவரத்தை 'வணக்கம் பகுதியில் எழுதி அதை ஒரு பக்கத்துக்குள் அடக்கியிருந்தார் சாவி. அதைப் படித்துப் பார்த்த பாலு அவர்கள் ஒரு சில திருத்தங்களுடன் அதை வெளியிட்டார். பாலு அவர்களிடம் சிற்சில சமயங்களில் உரிமை எடுத்துக் கொண்டு சாவி வேடிக்கையாகப் பேசுவது உண்டு. வயதில் மூத்தவர் என்பதனாலும், சாவியிடமுள்ள நகைச்சுவை உணர்வு காரணமாகவும் அந்த உரிமையை சாவிக்கு வழங்கியிருந்தார் திரு. பாலு அவர்கள். 'இந்த வணக்கம் பகுதியைத் தங்களால் அப்படியே ஒப்புவிக்க முடியுமா?" என்று பாலு அவர்களிடம் வேடிக்கை யாகக் கேட்டு வைத்தார் சாவி. உடனே அவர் மானசீகமாக அந்த வரிகளை ஒரு முறை கண்ணோட்டம் விட்டார். சரி, ஒப்புவிக்கிறேன்' என்று கூறியவர் ஒரு வரி விடாமல் ஒரு சிறு தவறு கூட இல்லாமல் அப்படியே நேரில் பார்த்துப் படிப்பது போல் ஒப்புவித்தார்! பாலு அவர்களின் நினைவாற்றல் கண்டு சாவி பிரமித்துப் போனார். அந்த ஆச்சரியத்திலிருந்து அவர் இன்னும் விடுபட வில்லை. அண்மையில் பாலு அவர்களைச் சாவி சந்தித்தபோது இதை அவரிடம் நினைவு கூர்ந்தாராம். பதில், ஒரு சின்ன புன்சிரிப்பு சாவிக்கு எப்போதுமே இந்த மேசை, நாற்காலி என்ற 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/117&oldid=824373" இலிருந்து மீள்விக்கப்பட்டது