பக்கம்:சாவி-85.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. வாஷிங்டனில் திருமணம் எழுத்தாளர் சாவிக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. எந்தத் திருமண நிகழ்ச்சிக்குப் போனாலும் அங்கே சுற்றிலும் நடப்பதைக் கூர்ந்து கவனிப்பார். சாஸ்திரிகள், நாதஸ்வரக்காரர்கள், பாட்டிமார்கள், சிறுவர்கள் எல்லோரும் என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனிப்பார். திருமணத்தை - அதன் சடங்குகளை, அதை ஒட்டிய சம்பவங்களை மையமாக வைத்து நகைச்சுவையாக ஏதேனும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட காலமாகவே சாவியின் அடிமனதில் ஊறிக்கொண்டிருந்தது. ஆனால் அது கதையா, நாவலா, கட்டுரையா, நகைச்சுவைத் தொடரா என்பது பற்றியெல்லாம் எந்த முடிவுக்கும் வரவில்லை. ஒரு பத்து வருட காலம் இதே சிந்தனைதான். 'தினமும் சாமி கும்பிடும் போது கூட இந்த என் ஆசையை நான் ஒரு பிரார்த்தனையாக வெளியிடுவேன் என்கிறார் சாவி. 'ஆப்லெண்ட் மைண்டட் புரொஃபஸர் என்றொரு ஆங்கில் நகைச்சுவைப் படம் சென்னையில் சக்கைப்போடு போட்டது. ஃப்ளப்பர் என்ற பறக்கும் ரப்பரைத் தம் அறிவியல் திறமையால் கண்டுபிடிக்கிறார் பேராசிரியர் ஒருவர். அதை வைத்துப் பின்னிப் பின்னி, பல சம்பவங்களைப் பொருத்தமாய்ப் புகுத்தி, நடக்கமுடியாத விஷயங்களை அதீத கற்பனையுடன் மிகைப்படுத்தி, பார்ப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த அந்தப் படத்தை சாவி ஒரு முறைக்கு இரண்டு முறை பார்த்து ரசித்தார். 1 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/121&oldid=824384" இலிருந்து மீள்விக்கப்பட்டது