பக்கம்:சாவி-85.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 காவிரி நதி தீரத்தில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை உற்சவத்தைக் கண்டுகளிக்க பரணிதரன், பாப்ஜி, சாவி மூவரும் திருவையாறு போயிருந்தனர். காவிரிக் கரையோரம், படித்துறை, தியாகராஜர் சமாதி, இசை நிகழ்ச்சி, உஞ்சவிருத்தி பஜனை - இப்படி அந்தப் புனிதமான திருவையாறு சாவியின் மனதில் ஒருவித பரவசத்தை உண்டாக்கியது. திடீரென உள்ளுக்குள் கற்பனை ஊற்று பொங்கி வருவது போல ஒர் உணர்வு. ஒரு மாலைப் பொழுதில் அந்தப் படித்துறையில் ரசிகர்களும் இசைக் கலைஞர்களும் கை, கால் அலம்பி, நெற்றியிலும் உடம்பிலும் பட்டை பட்டையாக விபூதியைக் குழைத்து இடுவதைப் பார்த்து, சுற்றியிருந்த வெளிநாட்டுக்காரர்களும் கை, கால் அலம்பி திருநீறு பூசிக் கொண்டிருந்தது ஒரு வேடிக்கையான அபூர்வக் காட்சியாக இருந்தது. அதிலிருந்து சாவியின் கற்பனைக்கு ஒரு பொறி தட்டியது. அந்தக் கற்பனை நூலிழை அறுந்து விடாமல் தொடர்ந்த சிந்தனை மூலம் கதைக்கு வடிவம் கொடுத்துக் கொண்டே இருந்தார். 'திருவையாறு உற்சவத்தை தேம்ஸ் நதிக்கரையில் நடத்தினால் என்ன என்பதே அந்தக் கற்பனை. அவ்வளவுதான்அதற்குமேல் ஒரு நிமிடம் கூட அங்கே தங்கியிருக்கப் பிடிக்க வில்லை. அவசரமாக சென்னை திரும்பி விட்டார். வரும் வழியில் கற்பனை வேறு டிராக்கில் திரும்பியது. திருவையாறு உற்சவம் என்பதற்குப் பதிலாக அதுவே வாஷிங்டனில் திருமணம்' என்ற நகைச்சுவைத் தொடராக மாறியது. சென்னை வந்ததும், விகடன் பொறுப்பாசிரியர் பாலு அவர்களிடம் தம் கற்பனை பற்றிச் சாதாரணமாகத்தான் இரண்டொரு வரிகளில் சொன்னார். முதலில் அவரிடமிருந்து எந்த விதமான ரியாக்ஷனும் இல்லை. 'என்ன கதை? எப்படி எழுதப் போகிறீர்கள்? எத்தனை வாரம்? என்று அவர் எதுவுமே 112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/122&oldid=824386" இலிருந்து மீள்விக்கப்பட்டது