பக்கம்:சாவி-85.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் கேட்கவில்லை. சாவியின், உணர்ச்சிபூர்வமான உற்சாகத்திலிருந்து பாலு அவர்களுக்கு எல்லாம் புரிந்து போயிருக்க வேண்டும். சாவியின் எழுத்தில் நம்பிக்கை வைத்து அடுத்த வாரமே ஆரம்பித்து விடலாம் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார். அத்துடன் அமெரிக்க கோடீசுவரர் ஒருவர் இக்கல்யாணத்தை 'ஸ்பான்ஸர் செய்வது போல் இருந்தால் நன்றாக இருக்கும்' என்ற யோசனையையும் வெளியிட்டார். அப்புறமென்ன? நாள் முழுவதும் இதே சிந்தனைதான். மாப்பிள்ளை அழைப்பு, சாஸ்திரிகள் தமாஷ், அம்மாமிகள் அப்பளம் இடுவது, சம்பந்திச் சண்டை என்று மாறி மாறி திருமணக் காட்சிகள் சாவியின் மனக்கண் முன் பவனி வந்து கொண்டே இருந்தன. அப்போது ஆனந்த விகடன் அலுவலகத்துக்கு அடுத்த கட்டடத்திலேயே அமெரிக்கன் லைப்ரரி இருந்ததால் அடிக்கடி அங்கே போய் வாஷிங்டன் நகரம் பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்தார். அந்த நகரத்தின் முக்கிய வீதிகள், கட்டடங்களின் விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் அத்தனையும் வாங்கி வந்து கரைத்துக் குடித்தார். பொடாமாக் ரிவர், டைடல் பேஸின், ஜெஃபர்ஸன் மண்டபம், ஜார்ஜ் டவுன், சம்மர் ஹவுஸ், ஆர்ட் காலரி, வாஷிங்டன் ஸ்தூபி, லிங்கன் மண்டபம், செர்ரி ப்ளாஸ்ஸம், பென்ஸில்வேனியா அவென்யூ அத்தனையும் அத்துபடி! ஒருவேளை * நகைச்சுவையாக எழுத முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற கவலையும் கூடவே அவரை ஆட்கொண்டது. எனவே, யார் எழுதுகிறார் என்பதை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்து கதை வெற்றிகரமாக அமைந்து விட்டால் அப்போது 'சாவி’ என்று போட்டுக் கொள்ளலாம் என்று திரு.பாலு அவர்களிடம் சொன்னார். கதை போகும் சுவாரசியத்தோடு யார் எழுதுகிறார்கள் என்ற சஸ்பென்ஸும் சேர்ந்தால் வாசகர்களின் ஆர்வமும் அதிகரிக்குமே என்ற எண்ணத்தில் அவரும் அதைச் சரியென்று ஒப்புக் 113

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/123&oldid=824388" இலிருந்து மீள்விக்கப்பட்டது