பக்கம்:சாவி-85.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கொண்டார். அடுத்த வார விகடனில் வாஷிங்டனில் திருமணம் என்று மட்டுமே விளம்பரப்படுத்தப்பட்டது. மொத்தம் பதினோரு அத்தியாயங்கள் மட்டுமே எழுதினார். அதற்கேற்ப வாஷிங்டனில் திருமணம் என்பதில் பதினோரு எழுத்துக்கள் பொருத்தமாக அமைந்தன. புத்தகமாக வெளியான போது, முதல் அத்தியாயத்திற்கு 'வா என்றும், அடுத்து ஷி என்றும் இப்படியே 'ம்' என்ற எழுத்துடன் கடைசி அத்தியாயத்தை முடித்திருந்தார். அந்தக் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது வாரா வாரம் கதையின் போக்கு குறித்து தன் இனிய நண்பர் பூரீதர் அவர்களோடு சாவி நுணுக்கமாக விவாதிப்பது உண்டு. சாவிக்கு அந்த விவாதங்கள் பெரிதும் பயன் உள்ளதாக அமைந்தன. அந்த நாட்களை பூரீதர் நினைவு கூர்கிறார்: 'வாரா வாரம் வாசகர்களிடையே அந்தக் கதை சரித்திரம் படைத்துக் கொண்டிருந்தது. நகைச்சுவைக் கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகஆக, சாவியின் பொறுப்பு பன்மடங்காயிற்று. "கீப்பிங் அப் தி. டெம்ப்போ என்பது எளிதான காரியமல்ல. அடுத்த வாரத்துக்கான ஐடியாக்களுக்கான கவலை அதிகமாயிற்று. தினமும் டிரைவ் - இன்-ஹோட்டலில் கூடிப் பேசுவோம்." இந்த நகைச்சுவை நவீனத்துக்கு வாய்த்த இன்னொரு பலம் திரு.கோபுலு அவர்களின் சித்திரங்கள். "உயிருள்ள அவருடைய சித்திரங்கள் வாசகர்களை வாஷிங்டன் நகருக்கே அழைத்துச் சென்று என் கற்பனைக்கெல்லாம் நிஜ உருவம் தந்து நேருக்கு நேர் காண்பது போன்ற பிரமையை ஏற்படுத்தித் தந்தன என்கிறார் சாவி. முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுகூட 114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/124&oldid=824390" இலிருந்து மீள்விக்கப்பட்டது