பக்கம்:சாவி-85.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 அமெரிக்கா போனபோதுதான் தம்முடைய கதையில் எந்தெந்த இடங்களைச் சொல்லி இருந்தாரோ அந்த இடங்களையெல்லாம் பார்த்து விட்டு வந்தார். - டம்பார்ட்டன் ஒக்ஸ், ராக் க்ரீக் பார்க், அம்மாமிகள் அப்பளம் உலர்த்திய ஆர்ட் காலரி மொட்டை மாடி, ஜானவாசம் சென்ற பென்ஸில்வேனியா அவென்யூ பாலிகை விட்ட டைடல் பேஸின், சாஸ்திரிகள் துணி துவைத்த பொடாமாக் நதி, வாஷிங்டன் ஸ்தூபி, ஆப்ரகாம் லிங்கன் மண்டபம், செர்ரி ப்ளாஸம் இவ்வளவையும் கண்டு வியப்படைந்து போனார். அந்த இடங்கள் தாம் எழுதியபடியே தத்ரூபமாக இருப்பது கண்டு ஏதோ பூர்வ ஜன்மத்தை எட்டிப் பார்ப்பது போல் உணர்ச்சி வசப்பட்டார். அந்தப் பயணத்தின்போது பாரூஸ் ரெஸ்டாரண்ட்" உரிமையாளர் திரு. நடராஜன் - வி.ஜி.பன்னீர்தாஸ் அவர்களால் சாவிக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட நண்பர்- வாஷிங்டனில் யூனியன் ரெயில்வே ஸ்டேஷனில் சாவியை வரவேற்கக் காத்திருந்தார். "என் கதையில் வரும் சில வி.ஐ.பி. விருந்தினர்கள் வாஷிங்டன் யூனியன் ஸ்டேஷனில்தான் வந்திறங்குவது போல் எழுதியுள்ளேன். அதனால் அந்த இடத்தை நேரில் பார்க்க ஆசை எனவே, பிலடல்ஃபியாவிலிருந்து ரெயிலில் வருகிறேன்' என்று முன்கூட்டியே நடராஜனுக்கு தெரியப்படுத்தி இருந்தார். சாவி யூனியன் ஸ்டேஷனில் இறங்கிய போது நடராஜன் அவரை வரவேற்று காரில் தம்முடைய 'பாரூஸ் ரெஸ்டாரண்ட்'டுக்கு அழைத்துப் போனார். அது என்.ஸ்ட்ரீட் (N. STREET) டில் இருந்தது. ஸ்டேஷனிலிருந்து கார் என்.ஸ்ட்ரீட் நோக்கிப் போய்க் கொண்டிருந்த போது சாவி கேட்டார்: 'நடராஜன், என்.ஸ்ட்ரீட்டுக்கு வலது பக்கம்தானே போகணும், நீங்க ஏன் லெஃப்ட்ல போlங்க?" 116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/126&oldid=824394" இலிருந்து மீள்விக்கப்பட்டது