பக்கம்:சாவி-85.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அசந்துபோன நடராஜன் காரின் வேகத்தைக் குறைத்து 'உண்மையைச் சொல்லுங்க. நீங்க இதுக்கு முன்னே வாஷிங்டன் வந்திருக்கீங்க. இதுதான் முதல் தடவைன்னு பொய்தானே சொல்றீங்க?" என்றார். 'இல்லை... இதுதான் முதல் தடவை என்று சாவி திரும்பத் திரும்பச் சொல்லியும் நடராஜன் நம்பவில்லை. "ரைட்லதான் போகணும். அது ஒன் வே' என்பதால் லெஃப்ட்ல போறேன்' என்று விளக்கம் சொல்லிவிட்டு உண்மையைச் சொல்லுங்க, நிஜமாகவே நீங்க இதற்கு முன் வந்ததில்லையா?” என்று கேட்டார். "சத்தியமாக இல்லை. வாஷிங்டன் ரோட் மேப்பைத் துருவிப் பார்த்து மனதில் பதித்துக் கொண்டிருக்கிறேன். பரீட்சைக்குப் படித்ததுபோல் இந்நகரம் பற்றிப் பல புத்தகங்கள் வேறு படித்திருக்கிறேன். அதனால் எல்லாமே ஞாபகம் இருக்கிறது" என்றார் சாவி. - பாரூஸ் ரெஸ்டாரண்ட்டில் சாவிக்கு அன்று வாழை இலை போட்டு ஜானவாச சாப்பாடு தடபுடலாகத் தயாரித்திருந்தார் நடராஜன். காரில் போகும்போதே திருவாவடுதுறை நாதஸ்வரம் டேப்பில் தோடி ஒலித்தது. அதன்பின் பலமுறை சாவி அவர்கள் வாஷிங்டன் போய் வந்தபோதிலும் அந்த முதல் பயணம் அவரால் மறக்க முடியாத பயணமாக அமைந்து போனது. இந்தக் கதை நாடக மேடையிலும் வெற்றிகரமாக வலம் வந்தது. பல்வேறு குழுக்கள் இந்த நாடகத்தை மேடையேற்றி இருக்கின்றன. சாவியின் எழுத்தை ரசித்துப் படிக்கும் நடிகர் பூர்ணம் விசுவநாதன் அவர்கள் தம் நினைவுப் பாதையில் பின்னோக்கிப் பயணம் செய்கிறார்: "ஒருநாள் திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பின் 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/127&oldid=824396" இலிருந்து மீள்விக்கப்பட்டது