பக்கம்:சாவி-85.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சேர்த்து விட்டதால் நாடகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு ஏற்பட்டு விட்டது. இந்த அமெரிக்கர்களின் ஒத்துழைப்பு பல மாதங்கள் நீடித்ததால் நாடகம் கோலாகலமாக நடந்தது. சாவியின் உற்சாகத்துக்கு அளவேயில்லை. அரங்கேற்றமே ராசியாக அமைந்தது. அடுத்தடுத்து எத்தனை நாட்கள்! எங்கு பார்த்தாலும் வாஷிங்டனில் திருமணம்' பற்றிய பேச்சுதான். ஊரின் மூலை முடுக்குகளிலெல்லாம் அதன் போஸ்டர்கள்தான். அப்போது 'ஆனந்த விகடன் ஆசிரியரிடமிருந்து ஒரு சேதி வந்தது. வாஷிங்டனில் திருமணம் விகடனில்தான் பிரசுரமாயிற்று. அதனால் அதை நாடகமாக்கி மேடையேற்றுவதற்கு விகடனின் அனுமதியை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். ஆகவே எங்கள் அனுமதி பெற்றாக வேண்டும்." - இதைப் பார்த்து நாங்கள் சாவியிடம் ஓடினோம். அவர், 'கதை என்னுடையது; எந்தச் சட்டத்தின்படி பார்த்தாலும் அதன் மீதான உரிமை முழுவதும் என்னுடையதுதான். இதை அப்படியே விகடன் ஆசிரியரிடம் சொல்லுங்கள்' என்றார் சாவி. விகடன் ஆசிரியர் திரு. எஸ்.எஸ்.வாசனைப் போய்ப் பார்த்தோம். சாவி சாரின் வாதத்தை அவரிடம் சொன்னோம். இரண்டு நிமிடம் அமைதி. அதன் முடிவில் வாசன் அவர்கள் சொன்னார்கள்: “இரண்டு நாள் கழித்து என் மகன் பாலுவை விகடன் ஆபீஸில் போய்ப் பாருங்கள்." அதேபோல் நாங்கள் விகடன் ஆபீஸுக்குச் சென்ற போது பாலு அவர்கள் எங்களை வாசலிலேயே வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று காப்பி கொடுத்து உபசரித்தார். அப்புறம் விஷயத்தைச் சொன்னார்: "நாங்கள் வக்கீலைக் கலந்து பேசி விட்டோம். சாவி இஷ்டப்படியே நாடகத்தை நடத்திக் கொண்டு போங்கள்; பெயருக்கு விகடனுக்கு ராயல்டியாக ஏதாவது ஒரு சிறு தொகை கொடுத்தால் போதும். ஒரு நாடகத்துக்கு ஐந்து ரூபாய் கொடுங்கள் என்று அவர் சொன்ன போது எங்களால் நம்பவே முடியவில்லை... 119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/129&oldid=824400" இலிருந்து மீள்விக்கப்பட்டது