பக்கம்:சாவி-85.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 இப்படியாக, ஒரு பிரமாண்டப் புயலாக வெடிக்குமோ என்று நாங்கள் பயந்த விஷயம், வெல்வெட் போன்ற மிருதுத்தன்மையுடன் எங்கள் மீது அமர்ந்து எங்களுக்கு ஒப்பற்ற சுகத்தைக் கொடுத்தது.' இது தொடர்பான இன்னொரு முக்கிய செய்தியையும் சொல்ல வேண்டும். இந்த நகைச்சுவைப் புதினம் இன்று மிகப்பிரபலமாக இயங்கி வரும் ஒரு தன்னார்வத் தொண்டு அமைப்பின் நிறுவனரையும் அவரது செயல்பாடுகளில் முடுக்கி விட்டிருக்கிறது. - 'வாஷிங்டனில் திருமணம் நம் உள்ளத்திலே செதுக்கப்பட்ட கல்வெட்டாகும். இந்தக் கருத்தினைப் பின்பற்றி நான் பெண் உறுப்பினர்களைக் கொண்டு சர்வதேச நவராத்திரி கொலு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தேன். அதில் சென்னையில் வசிக்கும் அமெரிக்கர்கள், ரஷ்யர்கள், ஆஸ்திரேலியர்கள் போன்ற வெளிநாட்டவர் பெருமளவில் பங்கு கொண்டார்கள். வாஷிங்டன் கொலு இங்கு வைக்கப்பட்டது. வந்திருந்த வெளிநாட்டவர் அனைவரும் அந்தக் கொலுவை ரசித்து, அயல்நாடுகளில் வெற்றி கண்ட யோசனைகளைப் பெற்று ஏன் அவற்றுக்கு இந்தியாவில் செயல்வடிவம் தரக்கூடாது?’ என்று ஒரே குரலில் கேட்டார்கள். நம் திருமணத்தை சாவி அமெரிக்காவில் நடத்தியது போல் அயல்நாடுகளில் நான் பார்த்த நல்ல அம்சங்களுக்குத் தரப்பட்ட செயல் வடிவம்தான் எக்ஸ்னோரா' என்கிறார் எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனரும் தலைவருமான நண்பர் எம்.பி. நிர்மல். இப்படி மிக மிகப் பரவலான முறையில் மக்களைச் சென்றடைந்து, நகைச்சுவைப் படைப்புலகில் தனக்கென தனியொரு முத்திரையைப் பதித்துவிட்ட அற்புதமான கற்பனை சாவி அவர்களின் வாஷிங்டனில் திருமணம்." 120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/130&oldid=824404" இலிருந்து மீள்விக்கப்பட்டது