பக்கம்:சாவி-85.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. பெருந்தலைவர் காமராஜ் 'ஒரு பத்திரிகையாளனாக நீங்கள் என்ன சம்பாதித்தீர்கள்? என்று சாவியிடம் கேட்டால், தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பழகும் வாய்ப்பு கிட்டியதே - அவர்களில் சிலரோடு நட்பு கொள்ளும் பேறு கிட்டியதே, அதுதான் நான் சம்பாதித்த பெரும் சொத்து' என்கிறார். காமராஜர், பக்தவத்சலம், ஒ.வி.அளகேசன், சி.சுப்பிர மணியம், ஆர்.வெங்கட்ராமன், பொள்ளாச்சி மகாலிங்கம் , பெரியார், வாரியார், ஜி.டி.நாயுடு, சர்க்கரை மன்றாடியார், ஜி.ஆர்.கோவிந்தராஜுலு, திருமதி சந்திரகாந்தி அம்மையார், ஜி.ஆர்.தாமோதரன் என்று சாவி அவர்களின் வி.ஐ.பி. நண்பர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவர்களை ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பார்த்துப் பேசி பேட்டி கண்டதுடன் முதல் சந்திப்பு முடிந்து போனாலும், பின்னர் பத்திரிகையாளர் என்ற எல்லையைத் தாண்டி அவர்களது நட்பைப் பெறும் வகையில் சாவிக்கு அவர்கள் மதிப்பும் மரியாதையும் தந்து அவருடன் பழகினார்கள். குறிப்பாக பெருந்தலைவர் காமராஜ் அவர்களோடு சாவிக்குக் கிட்டிய நட்பு ஒரு சகோதர வாஞ்சையுடன் அமைந்தது. ஒருமுறை சாவி விருதுநகர் சென்று காமராஜரின் 121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/131&oldid=824406" இலிருந்து மீள்விக்கப்பட்டது