பக்கம்:சாவி-85.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 தாயாரை பேட்டி கண்டு விகடனில் எழுதினார். பின்னர் காமராஜரும், ஒ.வி.அளகேசனும் செங்கற்பட்டு, தென்னாற்காடு மாவட்டங்களில் காரில் சுற்றுப் பயணம் போன போது அவர்களுடன் சாவியும் போயிருந்தார். அந்த வாரம்தான் காமராஜின் தாயாரைச் சந்தித்து சாவி எழுதிய கட்டுரை விகடனில் வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையைப் பாராட்டி திரு. அளகேசன் பேசிக் கொண்டு வந்தார். காமராஜர் புன் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் 'விருதுநகர் போயிருந்தீங்களா? அம்மாவைப் பார்த்தீங்களா? என்ன சொன்னாங்க?' என்று சாவியிடம் விசாரித்தார். 'நீங்க அனுப்பற பணம் போதலையாம். 'அறுபது ரூபாய் பத்துமாய்யா? சொல்லுங்கய்யா' என்று என்னைத் திரும்பத் திரும்பக் கேட்டாங்க" என்றார் சாவி. "அது போதும்ணேன். அதுக்கு மேல என்ன செலவு?" என்று சாவியையே திருப்பிக் கேட்டார் காமராஜ். அதன் பின்னர் ஒருநாள் காமராஜர் அச்சிறுப்பாக்கம் பயணிகள் விடுதியில் தங்க நேரிட்டபோது அவருடன் சாவியும் அங்கே தங்க வேண்டியதாயிற்று. காமராஜர் எப்போதும் இரவில் தனியாகத்தான் படுத்துறங்குவார். அவருடைய அறையில் வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அன்று இரண்டு இட்லியும் ஒரு தோசையும் சாப்பிட்டதுடன் இரவு ஆகாரத்தை முடித்துக் கொண்டார். பிறகு 'கதவை வெளியே தாழ்ப்பாள் போட்டுக்குங்க. காலைல ஆறு மணிக்கு திறந்தாப் போதும்" என்று அரசு அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு உள்ளே போய் உறங்கத் தொடங்கி விட்டார். இப்படி ஒரு எளிய வாழ்க்கையா? என்று சாவி வியந்து போகிறார். காமராஜரின் புகழ் மாநில எல்லைகளைத் தாண்டி 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/132&oldid=824408" இலிருந்து மீள்விக்கப்பட்டது