பக்கம்:சாவி-85.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் தேசிய அளவில் விசுவரூபம் எடுத்திருந்த நாட்களில் ஒருநாள் அவரை அவரது இல்லத்தில் சாவி சென்று பார்த்தபோது பேச்சுவாக்கில் "நான் நாளை காலை டெல்லிக்குப் போக இருக்கிறேன்" என்று காமராஜர் சொன்னார். சட்டென்று "நானும் வரட்டுமா?' என்று சாவி கேட்டு வைத்தார். கொஞ்சம் கூடப் பந்தா இல்லாமல் “வாங்க, வாங்க, நீங்க என் கூடவே தங்கலாம்' என்றார் காமராஜ். ஏன்? எதற்காக வரீங்க?' என்று ஒரு வார்த்தை கூட அவர் கேட்காதது சாவிக்குப் பெரும் வியப்பு. விகடன் பொறுப்பாசிரியர் திரு. பாலு அவர்களிடம் போய் இதைச் சொன்னபோது இந்த நல்ல வாய்ப்பை விட்டு விடக்கூடாது' என்பதால் சாவியின் விமானப் பயணத்துக்கு அன்றே ஏற்பாடு செய்தார். அப்போதுதான் காமராஜருடன் ஒரு நாள் என்ற தலைப்பில் விகடன் தீபாவளி மலரில் கட்டுரை எழுதினார் சாவி, 'டெல்லியில் அந்தப் பெருந்தலைவரோடு நான் தங்கிய சில நாட்கள் மறக்க முடியாதவை. கிங் மேக்கர் என்று காமராஜர் அழைக்கப்பட்ட காலம் அது. காமராஜ் பிளான்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு, அதைச் செயல் வடிவமாக்கும் பொருட்டு முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரம் அது. காமராஜரின் கடைக்கண் பார்வை நம் மீது விழாதா என்று தலைவர்கள் பலர் ஏங்கிக் காத்துக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் அவர் கூடவே இருந்து கவனிக்கும் அபூர்வ வாய்ப்பு பெற்ற ஒரே அதிர்ஷ்டசாலி நான். அதுல்யா கோஷ் போன்ற படா படா அரசியல்வாதிகள் எல்லாம் அவர் முன்பாக உட்காரவே அச்சப்பட்டார்கள். அவர் மீது அப்படியொரு மரியாதை கொண்டிருந்தார்கள். இந்திய அரசியலின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தகுதி அப்போது காமராஜருக்கு இருந்தது. 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/133&oldid=824409" இலிருந்து மீள்விக்கப்பட்டது