பக்கம்:சாவி-85.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பழகும் வாய்ப்பு கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் நான் திளைத்துப் போயிருந்தேன்! காமராஜரோடு டெல்லியில் சுற்றி அலைந்த களைப்பு மேலீட்டால் ஒரு நாள் இரவு தமிழ்நாடு ஹவுஸில் அவரது அறையிலேயே படுத்துத் தூங்கிப் போனேன். நான் பலமான குறட்டை விட்டிருக்க வேண்டும். யாரோ என்னைத் தட்டி எழுப்பினார்கள். திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் காமராஜர் "சரியாப் போச்சு. நான்தான் குறட்டை விடுகிறவன்னா, நீங்க எனக்கு மேல சத்தமா விடlங்களே எழுந்து போய்ப் பக்கத்து ரூம்ல படுத்துக்குங்க... அப்பதான் நானும் நிம்மதியாத் தூங்கலாம். நீங்களும் நல்லாத் தூங்க முடியும்" என்று சொல்லிச் சிரித்தார் என்று சாவி தமது பழைய கணக்கு என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார். டெல்லியில் ஒருநாள் சாவியிடம், வாஷிங்டனில் திருமணம் கதை ரொம்ப நல்லா இருக்குன்னு எல்லாம் பேசிக்கிறாங்களே! நான் இன்னும் படிக்கலே, புக் இருக்கா?” என்று கேட்டிருக்கிறார். உடனே சாவி தம்மிடமிருந்த அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அன்றிரவே அந்த நாவலைப் படித்து முடித்துவிட்டு நல்லா இருக்கு என்று ஒரே வார்த்தையில் காமராஜர் பாராட்டியிருக்கிறார். திரு. பக்தவத்சலம் அப்போது தமிழக முதல்வராக இருந்தார். காமராஜர் திட்டத்தின் கீழ் முதல்வர் பதவியில் இருந்து காமராஜர் விலகிய பின்னர் திரு. பக்தவத்சலம் பொறுப்பேற்றார். தமிழ் நாட்டு மக்களிடையே நல்ல பண்புகளும், பழக்க வழக்கங்களும் வளர வேண்டுமானால் நமது புராண இதிகாசக் கதைகளைக் கதாகாலட்சேபம், நாடகம் வாயிலாகப் பட்டித் தொட்டியெங்கும் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற யோசனையை முதல்வர் பக்தவத்சலம் திருவையாற்றில் வெளியிட்டார். 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/135&oldid=824413" இலிருந்து மீள்விக்கப்பட்டது