பக்கம்:சாவி-85.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 டெல்லியில் காமராஜருடன் தங்கியிருந்த போது பக்தவத்சலம் அவர்களின் இந்த யோசனை பற்றி சாவி குறிப்பிட்டதுடன் இதற்கு நீங்கள்தான் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "என்ன பண்ணலாங்கறீங்க?" என்று கேட்டார் காமராஜர். 'நீங்க அனுமதி கொடுத்தால் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் வாரியார் சுவாமிகளைக் கொண்டு ராமாயணக் கதை சொல்லச் சொல்லலாம். எஸ்.வி.சகஸ்ர நாமம் அவர்களை அரிச்சந்திரா நாடகம் போடச் சொல்லலாம். அப்புறமா இதைத் தமிழ்நாடு முழுவதும் கொண்டு போகலாம். என்று சாவி சொன்ன யோசனை காமராஜருக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று. "சரி, நீங்களே செய்யுங்க; ஒரு கமிட்டி போட்டுக்குங்க" என்று கணமும் தாமதியாமல் அனுமதி வழங்கி விட்டார் காமராஜ். சென்னை வந்ததும் சாவி இதற்கென ஒரு கமிட்டியை அமைத்தார். சத்திய சபா என்று பெயர் சூட்டப்பட்டது. காமராஜர் அதன் தலைவராக இருக்கச் சம்மதித்தார். சாவி செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திருமதி வாசன் உப தலைவராகவும், ரத்னம் ஐயர், லிப்கோ சர்மா போன்ற பிரமுகர்கள் கமிட்டி அங்கத்தினர்களாகவும் நியமிக்கப்பட்டு அடுத்த நாளே வேலை வேகமாக ஆரம்பிக்கப்பட்டது. சத்திய சபா கமிட்டிக் கூட்டம் தேனாம்பேட்டை அரங்கில் அடிக்கடி கூட்டப்பட்டது. திட்டமிட்டபடி வாரியார் ராமாயணக் கதை காங்கிரஸ் மைதானத்தில் கலகலப்பாகத் தொடங்கியது. தொடர்ந்து நாற்பது நாட்கள். இடையிடையே சகஸ்ரநாமத்தின் நாடகங்கள். மைதானம் மேடு பள்ளங்கள் திருத்தப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு விழாக் கோலம் பூண்டது. ஏ.வி.எம். செட்டியார் அவர்கள் முகப்பு வாயிலை பிரபல ஒவியர் சேகர் அவர்களைக் 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/136&oldid=824415" இலிருந்து மீள்விக்கப்பட்டது