பக்கம்:சாவி-85.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் கொண்டு அலங்கரித்துக் கொடுத்தார். ஒளவையார் படத்துக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பிள்ளையார் சிலையை திரு. வாசன் அவர்கள் ராமாயணக் கதை நடக்கும் இடத்தில் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். திரு. பக்தவத்சலம் கொடியேற்றி வைக்க, மைசூர் மகாராஜா (அப்போது சென்னை கவர்னர்) அவர்கள் விழாவைத் தொடங்கி வைத்தார். தினம் தினம் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போய் மைதானம் நிரம்பி வழிந்தது. எவ்வளவு பேர் வந்தும் என்ன? கதை கேட்க காமராஜர் வராமலிருக்கிறாரே என்ற குறை சாவிக்கும், வாரியாருக்கும் மற்ற கமிட்டி அங்கத்தினர்களுக்கும் இருந்தது. தலைவரைப் போய் அழைத்த போது என்னைக் கூப்பிடணுமா என்ன? மெட்ராஸ்ல இருக்கச்சே டைம் கிடைக்கிறப்ப வந்துடறேன் என்று காமராஜர் உறுதியளித்தார். ஒருநாள் திடீரென 'இன்று கதை கேட்க காமராஜர் வருகிறார் என்று டெலிபோனில் தகவல் வந்தது. இதை வாரியாரிடம் சாவி சொல்ல, வாரியாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அன்று அனுமன் ஆற்றல் பற்றி வாரியார் விஸ்தாரமாகப் பேசினார். 'தன்னிடம் எந்தக் காரியத்தை ஒப்படைத்தாலும் அதை வெற்றிகரமாகச் சாதிக்கக் கூடியவர் அனுமர். காரணம்? அவர் ஒரு பிரம்மசாரி. பிரம்மசாரிகள் எப்போதுமே தங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளை வெற்றியாகச் செய்யக் கூடிய ஆற்றலும் வல்லமையும் பெற்றவர்கள் என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த தருணத்தில் காமராஜர் அரங்கத்துக்குள் நுழைந்தார். கூட்டத்தினர் காமராஜர் வரும் திக்கு நோக்கி ஆவலோடு திரும்பிப் பார்த்து ஆரவாரித்தனர். நான் அனுமனைச் சொல்கிறேன், நீங்கள் யாரை எண்ணி மகிழ்கிறீர்களோ? என்று வாரியார் தமக்கே உரிய 'டைமிங்'கில் ஒரு போடு போடவும் 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/137&oldid=824417" இலிருந்து மீள்விக்கப்பட்டது