பக்கம்:சாவி-85.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. விசிறி வாழைக்குப் பிறகு. 'வாஷிங்டனில் திருமணம் தொடர் சாவி அடுத்து என்ன எழுதப் போகிறார் என்று வாசகர்களை எதிர்பார்க்க வைத்தது. ஒருநாள் திரு. பாலு அவர்கள் சாவியிடம் வயதான தொழிலதிபருக்கும் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் பெண்மணிக்கும் இடையே காதல்’ என்று ஒரு ஒன் லைன் ஸ்டோரியைச் சொல்லி விட்டு இதை விரிவாக்கித் தொடர்கதையாக எழுத முடியுமா பாருங்க. இது ஒரு புதுமையான சப்ஜெக்ட். ஜெயகாந்தனோ அல்லது நீங்களோ தான் இதை வெற்றிகரமாகச் செய்ய முடியும்" என்றார். கதையே இல்லாமல் ஒரு கதை - அதுவும் வயதானவர்கள் காதல் கதை - தன்னால் முடியுமா என்று சற்று யோசித்தார் சாவி. பின்னர், தமக்கே உரித்தான துணிச்சலுடன் "சரி; எழுதுகிறேன். விசிறி வாழை என்பது கதையின் தலைப்பு' எனப் பளிச்சென்று ஒரு தலைப்பும் சொல்லிவிட்டார். சாவிக்கு இது ஒரு சவாலாக அமைந்து விட்டது. தம்மால் நகைச்சுவை மட்டுமல்ல, சீரியஸாகவும் எழுத முடியும் என்பதை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பு என்றெண்ணி அந்தச் சவாலை அவர் ஏற்றுக் கொண்டு விட்டார். தம் மனதில் பதிவாகி இருந்த சில கேரக்டர்களை அந்தக் கதையில் உருவகப்படுத்தினார். வெள்ளம் போல் கற்பனை புரண்டது. 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/139&oldid=824422" இலிருந்து மீள்விக்கப்பட்டது