பக்கம்:சாவி-85.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைத்திற்கும் மேலாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அற்புதமான முன்னுரை இந்நூலுக்குக் கிடைத்திருப்பது நூலுக்கும் பெருமை. எனக்கும் பெருமை. அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை நியதிகள் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட துய்மையான, ஆழமான நட்புக்கு சாவி - கலைஞர் நட்பு அழகான உதாரணம். இந்நூலுக்கு முன்னுளை வழங்க அவரை விடவும் தகுதியானவர்கள் வேறு யார் இருக்க முடியும்? கலைஞர் அவர்களுக்கு என் கனிவான தன்றி. 'சாவி - 85 எழுதியது ஏன் ? என்ற தலைப்புக் கேள்விக்குப் பதில்: சாவிக்கு நன்றி சொல்ல. எதற்காக? 毒 ரிசர்வ் வங்கி எனும் கடலில் கரைந்து போகும் ஒரு துளியாக, கரன்ஸி நோட்டுகளோடும், கனமான லெட்ஜர்களோடும் உறவாடிக் கொண்டிருந்த என்னை எழுதச் சொல்லி ஊக்குவித்தாரே, அதற்காக 醬 உலகின் பல நாடுகளுக்கும் என்னை அழைத்துப் போய், 'உற்றுப் பார் கற்றுக் கொள் என்று என் சிந்தனையைச் செம்மைப் படுத்தினாரே, அதற்காக, 尊 வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் மட்டுமல்லாமல், சில வெளிநாட்டு வானொலிகளுக்காகச் செய்தி வாசிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததற்கும், இன்று லண்டன் பி.பி.சி. உலகச் சேவையில், தமிழோசை வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்கவும், நேயர் நல்லுறவுப் பணியில் ஈடுபடவும், சாவி உருவாக்கிய பத்திரிகையாளன்’ என்ற தகுதியும் ஒரு முக்கிய காரணமாக அமைந்ததே, அதற்காக, புதுக்கவிதை பாணியில் சொல்வதானால் வேருக்குத் தலை வணங்கி அதற்கு ஒரு விழுது சொல்லும் நன்றியே இந்த சாவி-85.' 'மருதம்’ - ராணிமைந்தன் 2, மணவாளன் தெரு, வெற்றி நகர் எக்ஸ்டென்ஷன், செம்பியம், சென்னை - 60802. தொலைபேசி : 5378743 55:1950 ustaštasī£şszo : ra_main@yahoo.com

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/14&oldid=824424" இலிருந்து மீள்விக்கப்பட்டது