பக்கம்:சாவி-85.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 'விசிறி வாழை என்றதொரு அற்புதமான நாவல் விகடனில் தொடர்கதையாக வெளியானது. இந்தக் கதையின் சிறப்பு அம்சம் கதாபாத்திரங்கள் எல்லோரும் நீண்ட காலம் வாசகர்கள் மனதில் நிலைத்து நிற்கக் கூடிய கேரக்டர்களாக அமைந்து விட்டதுதான். "விசிறி வாழை என்று ஏன் பெயர் வைத்தீர்கள்?" என்று கேட்டதற்கு 'என் கதையில் கதாநாயகியின் வாழ்க்கை யாருக்கும் உபயோகமாகாமல் வீணாய்ப் போகிறது. விசிறி வாழை பார்த்திருப்பீர்கள். பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இருக்காது. பார்வதியின் சொந்த வாழ்க்கை அத்தகையது என்பதை மனதில் கொண்டுதான் அதையே கதையின் தலைப்பாக வைத்தேன்' என்கிறார் சாவி. ‘விசிறி வாழை சாவியின் எழுத்துத் திறமையின் இன்னொரு பரிமாணத்தை வாசகர்களுக்குக் காட்டியது. இந்தத் தொடர்கதை பின்னர் புத்தகமாக வெளிவந்தபோது இந்தக் கதையை நான் எழுத ஆரம்பித்தபோது என் கதாநாயகிக்காக கதை முடிவில் யாரேனும் ஒருவர் ஒரு சொட்டுக் கண்ணிர் விட்டாலே போதும். எனக்குக் கிடைத்த வெற்றியாக அதை நான் கருதுவேன்' என்று எழுதியிருந்தேன். கதை முடிந்த போது ஒரு சொட்டு அல்ல; ஒரு குடம் கண்ணிரே கிடைத்து விட்டது" என்று அப்புத்தகத்தின் முன்னுரையில் சாவி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் சோக அலையை எழுப்பிய மரணமாக அது அமைந்தது. உலக மக்களை அவர் மாதிரி கவர்ந்த அமெரிக்க அதிபர் வேறு யாரும் இதுவரை தோன்றவில்லை. கென்னடி கொலையுண்டதும், அவரைப் பற்றி சின்னதாக ஒரு தொடர் எழுதினால் என்ன என்று சாவிக்குத் 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/140&oldid=824426" இலிருந்து மீள்விக்கப்பட்டது