பக்கம்:சாவி-85.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் தோன்றியது. உடனே அமெரிக்கன் நூல் நிலையத்துக்குப் போய் கென்னடியின் வாழ்க்கையை விவரிக்கும் நாலைந்து புத்தகங்களை வாங்கி வந்து வேகம் வேகமாய்ப் படித்து முடித்தார். உதவி ஆசிரியர் மணியன் சாவியைப் பார்க்க அவர் அறைக்கு வந்தார். சாவியின் மேசை மேல் இருந்த அந்தப் புத்தகங்களைப் பார்த்து விட்டு, 'இதென்ன சாவி, கென்னடியைப் பற்றி எழுதப் போகிறீர்களா?' என்று கேட்டார். "அப்படித்தான் நினைத்தேன். வெளிநாட்டுத் தலைவரைப் பற்றிப் படிப்பதற்கு வாசகர்களிடம் அவ்வளவு ஆர்வம் இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆகவே புத்தகங்களைத் திருப்பிவிட எண்ணியுள்ளேன்' என்றார் சாவி, 'நீங்கள் இவற்றைத் திருப்பிக் கொடுத்து விடாதீர்கள். நான் ஒரு தரம் படித்து விட்டுத் தருகிறேன்” என்று அத்தனைப் புத்தகங்களையும் எடுத்துக் கொண்டு தன் அறைக்குப் போய் விட்டார் மணியன். - அந்தச் சமயம்தான் புவனேசுவரத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற இருந்தது. காமராஜ் அவர்கள் தான் அந்த ஆண்டு மாநாட்டின் தலைவர். தலைமை உரையைத் தமிழிலேயே எழுதிப் படித்த வரலாறு அங்கே நிகழ்ந்தது. பெருந்தலைவர்கள் பலர் கலந்து கொள்ளும் மிக முக்கியமான மாநாடு அது என்பதால் விகடன் நிருபராக யாரையாவது அங்கே அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் முடிவு செய்தார். 'சாவிதான் அந்த மாநாட்டுக்குப் போய் கட்டுரை எழுதத் தகுதியானவர். அவருக்குத்தான் காமராஜரை பர்ஸனலாகத் தெரியும்" என்று மணியன் திரு. பாலசுப்ரமணியன் அவர்களிடம் சொல்லியிருக்கிறார். 131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/141&oldid=824428" இலிருந்து மீள்விக்கப்பட்டது