பக்கம்:சாவி-85.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் ஆசீர்வாதமும் பண்ணவில்லை. மெளனமாகவே எழுந்து போய் அந்த வீட்டுக்குள் மறைந்து விட்டார். இரண்டு பேருக்கும் ஒன்றுமே புரியவில்லை. 'என்ன தவறு செய்தோம்? சுவாமிகள் ஏன் இப்படி நம்மைக் கண்டு கொள்ளவே இல்லை என்று இரண்டு பேரும் கேள்வி கேட்டுக் கொண்டார்களே தவிர விடை கிடைக்கவில்லை. 'பரவாயில்லை; நாளைக்கு மறுபடியும் வந்து தரிசனம் செய்யலாம்' என்றார் பூரீதர். மறுநாளும் அதேபோலத்தான். 'நீ யார்? என்று மகாபெரியவர் சாவியைக் கேட்க தான் முதல் நாள் சொன்ன விவரங்களை மறுபடியும் சாவி சொன்னார். 'சாமா சுப்பிரமணிய சாஸ்திரிகள் மகன். சாவன்னா விசுவநாதன் என்று மட்டும் சாவி சொன்னாரே தவிர, வேறு விவரம் ஏதும் சொல்லவில்லை. சுவாமிகள் மறுநாளும் எதுவும் பேசாமல் எழுந்து போய் விட்டார். மீண்டும் இருவருக்கும் ஏமாற்றம். இப்படி தொடர்ந்து பல நாட்கள் வரை இவர்கள் போவதும், நீ யார்?' என்று சுவாமிகள் கேட்பதும் என்று காலம் போய்க் கொண்டிருந்தது. அப்புறம் சில நாட்களுக்குள் மகா பெரியவர் தமது முகாமை கோபாலபுரத்தில் இருந்து நுங்கம் பாக்கத்துக்கு மாற்றி விட்டார். - ‘விடக்கூடாது, பெரியவர் மனசில என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? நாம் என்ன தப்பு செய்தோம்? ஏன் பேசாமல், ஆசீர்வாதமும் பண்ணாமல், மெளனம் சாதிக்கிறார்? இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்' என்று இரண்டு பேரும் சங்கடப்பட்டார்கள். நுங்கம்பாக்கத்திலும் சில நாட்கள் பழையபடியே இந்த கேள்வி-பதில் உரையாடல் தொடர்ந்தது. 135

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/145&oldid=824435" இலிருந்து மீள்விக்கப்பட்டது