பக்கம்:சாவி-85.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கடைசியாக சாவி மிகவும் சலித்துப் போய் "ரீதர், இன்னிக்கு நான் வரலை. நீங்க வேண்டுமானால் போய்ப் பாருங்கள் என்றார். அப்படிச் சொல்லிக் கொண்டிருந்த தருணத்தில் மடத்தைச் சேர்ந்த ஒருவர் ரீதர் வீடு தேடி வந்தார். காபி அருந்திக் கொண்டிருந்த சாவியும் பூரீதரும் ஒரு கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தார்கள். "பெரியவா சாவியை அழைச்சிண்டு வரச் சொன்னா என்றார் வந்தவர். இரண்டு பேருக்கும் வியப்பு தாங்கவில்லை. சோதித்தது போதும் என்று தெய்வம் மனம் இறங்கிவிட்டதோ வாங்க வாங்க, உடனே போவோம் என்று சொல்லிக் கொண்டே இருவரும் கிளம்பிப் போனார்கள். இவர்கள் சுவாமிகளைத் தேடிச் சென்ற போது மகா பெரியவர் மேனாவில் திருவீதி உலா போய்க் கொண்டிருந்தார். இவர்களும் கூட்டத்துடன் சேர்ந்து மேனாவைத் தொடர்ந்து போனார்கள். 'சாவியும் பூரீதரும் வந்திருக்கா' என்று மடத்து பிராமணர் சுவாமிகளிடம் வாய் பொத்திச் சொன்னதை பெரியவர் கவனிக்காதது போல் இருந்து விட்டார். இவர்களை அவர் கண்டு கொண்டதற்கான எந்தவித அடையாளமும் இல்லை. காலை பதினொன்றரை மணி. வெயில் சுளிர் என்று கொளுத்திக் கொண்டிருந்தது. திருவீதி உலா முடிந்து மகா பெரியவர் தங்கி இருந்த முகாமுக்குத் திரும்பியபோது அங்கே பக்தர்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. அவ்வளவு பேரும் ஒவ்வொரு வராக வந்து அவரை வந்தனம் செய்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றார்கள். அவர்கள் எல்லோரும் போன பின்பு கடைசியாக சாவியும் பூரீதரும் பெரியவாளின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்காரம் செய்தார்கள். பெரியவர் முகத்தில் லேசான 136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/146&oldid=824437" இலிருந்து மீள்விக்கப்பட்டது