பக்கம்:சாவி-85.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் புன்னகை 'சாவன்னா விசுவநாதன். சாமா சுப்பிரமணிய சாஸ்திரிகளோட புத்ரன். ம்...' என்று சொல்லி விட்டு, முதன் முதலாகக் கை உயர்த்தி இருவரையும் ஆசீர்வதித்ததோடு இருவருக்கும் குங்குமப் பிரசாதம் வழங்கினார். சாவிக்கு அந்த ஆசீர்வாதம் தந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆனால் 'ஏன் இப்படி இத்தனை நாட்கள் இழுத்தடிக்க வேண்டும்?' என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை. அப்புறம் அதைப் பற்றிப் பெரியவரும் எதுவும் பேசவில்லை. 'இன்று வரை மகாபெரியவர் ஏன் உங்களை அப்படிச் சோதித்தார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளவே இல்லையா?" என்று நான் சாவியைக் கேட்டபோது, 'தெரிந்து கொண்டேன். ஆனால் மகாபெரியவரைக் கேட்டு அல்ல. இந்தச் சம்பவத்தை, கற்றறிந்த பண்டிதர்கள் சிலரிடம் விவரித்துச் சொல்லி காரண்ம் என்னவாக இருக்கும்?' என்று கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்: 'ஒரு பிராமணன் மூத்தவர்களை வணங்கும் போது அபிவாதயே சொல்ல வேண்டும் என்பது சாஸ்திரம். அந்த அபிவாதயே'வில் வணங்குபவரின் பூர்வோத்தரமே அடங்கி இருக்கும். தான் யார், தன் கோத்திரம் என்ன, பூர்வீகம் என்ன என்கிற அத்தனை விவரங்களும் அதில் அடங்கி இருக்கும். முதலில் நான் யார் என்பதைச் சொல்லாமல் ரீதரைப் பற்றிச் சொன்னது அதிகப்பிரசங்கித்தனம்’ என்பதை உணர்த்தவே சுவாமிகள் அப்படி அலைக்கழித்திருக்கிறார். 'நான் மகா பெரியவரைப் பார்த்தவுடன் முதலில் என்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லாமல் ஏதோ மிகப் பெரிய மேதாவி போல பூரீதரை அறிமுகப்படுத்தியது முறையற்ற செயல், அதிகப்பிரசங்கித்தனம் என்பதை உணர்த்தவே பெரியவாள் 'நீ யார்?' என்று என்னைக் கேட்டிருக்கிறார். சுவாமிகளை 137

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/147&oldid=824439" இலிருந்து மீள்விக்கப்பட்டது