பக்கம்:சாவி-85.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. இளையாத்தங்குடியில்... காஞ்சி மாமுனிவர் அப்போது இளையாத்தங்குடியில் தங்கியிருந்தார். சாவியும், மணியனும் திராவிடத் தந்தை பெரியார் அவர்களை பேட்டி கண்டு விகடனில் எழுதுவதற்காக திருச்சிக்குப் போயிருந்தார்கள். அங்கே பெரியார் மாளிகையில் பேட்டியை முடித்துக் கொண்டு அங்கிருந்து இளையாத்தங்குடிக்குப் போனார்கள். இவர்கள் போனபோது சுவாமிகள் ஒரு மரத்தடியில் அமர்ந்து பக்தர்க்ளுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். சாவியைக் கண்டதும் 'நேரா மெட்ராஸ்லேர்ந்து வறயா? இல்லே, வழியில எங்கயாவது தங்கிட்டு வறயா?” என்று கேட்டார். 'திருச்சியில் பெரியாரைச் சந்தித்துவிட்டு வருகிறோம்' என்ற உண்மையைச் சொல்ல அப்போது சாவிக்குத் தைரியம் வரவில்லை. அதனால் 'மெட்ராஸ்லேர்ந்து வறோம் என்று பொய்யும் சொல்லாமல் மெய்யும் சொல்லாமல் பொதுவாகச் சொல்லி விட்டார். சுவாமிகள் அமர்ந்திருந்த அந்தச் சூழ்நிலையே வித்தியாசமாக இருந்தது. சற்று தூரத்தில் யாரோ ஒரு வயதான வெள்ளைக் காரப் பெண்மணி ஒருத்தி உட்கார்ந்திருந்தார். அந்த அம்மையார் அங்கிருந்தபடியே மகா பெரியவரைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். 139

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/149&oldid=824445" இலிருந்து மீள்விக்கப்பட்டது