பக்கம்:சாவி-85.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் 'அப்படியா சொல்கிறாய் நீ? இத பார், 1920லிருந்து எவ்வளவு பேர் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மாறி இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்களை எடுத்துச் சொல்லி, 'வர வர இந்து மதத்திலிருந்து வேறு மதம் மாறுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. இப்படியே போனால் எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்கிற மாதிரி ஆயிடும்' என்றார் மகாபெரியவர். சிறிது நேரம் மெளனம். பிறகு பெரியவர் தொடர்ந்தார். 'ஆர்தர் கொய்ஸ்ட்லர்னு ஒரு கம்யூனிஸ்ட் ரைட்டர் என்னை வந்து சந்திச்சான். பல கேள்விகள் கேட்டான். கிறித்துவர்கள் பிரார்த்தனை செய்யும் சர்ச்சுகளில் எப்பவும் அமைதி நிலவுகிறது. ஆனா உங்க கோயில்களில் எப்பவும் வாத்தியங்களின் சத்தம், குழந்தைகளின் கூச்சல், மக்களின் இரைச்சல் என்று ஒரே சத்தமாயிருக்கிறதே. பிரார்த்தனை செய்யும் இடம் அமைதியா இருக்க வேண்டாமா?' என்று என்னைக் கேட்டான். 'சர்ச்சுகள் நீங்க பிரார்த்தனை செய்கிற இடமாக இருப்பதால் அங்கே அமைதி காக்கப்படுகிறது. இந்துக்கள் பிரார்த்தனை செய்வது கோயில்களில் அல்ல. ஆண்டவனுக்கு நன்றி செலுத்துகிற இடமாகத்தான் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை என்று ஒர் அறை இருக்கும். அங்கேதான் பிரார்த்தனை பண்ணுவோம். அதை விட்டால் நதிக்கரையில் பிரார்த்தனை செய்வோம். கோயிலுக்குப் போய் நைவேத்தியங்கள் வைத்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்துவோம். விவசாயிகள் அறுவடை முடிந்ததும் பொங்கல் படைத்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவே பொங்கல் பண்டிகை கொண்டாடுகிறோம். ராஜாக்களுக்குக் கப்பம் கட்டி 141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/151&oldid=824450" இலிருந்து மீள்விக்கப்பட்டது