பக்கம்:சாவி-85.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் 'இது ஒரு விளம்பரம்தான். நம்ம கருத்து இல்லையே... இதெல்லாம் வியாபாரம்... இது காஞ்சிப் பெரியவருக்கு நன்றாக விளங்குமே!’ என்றார் பாலு. "அதென்னவோ, எப்படியானாலும் விளம்பரத்தை நிறுத்தி விடுங்கள். பெரியவர் வார்த்தைக்கு, நாம் மதிப்புத் தர வேண்டியது அவசியம்' என்றார் சாவி. சாவி நீண்ட நேரம் விவாதித்துப் பார்த்தார். பாலு அவர்கள் சம்மதிக்கவில்லை. சாவியும் விடாக் கண்டனாயிருந்து மேலும் மேலும் வாதாடிக் கொண்டிருந்தார். கடைசியில் பாலு சற்று நேரம் யோசித்து விட்டு விளம்பரத்துறை மேலாளரை அழைத்து அந்த விளம்பரம் பற்றிய விவரங்களைத் தெளிவாக விசாரித்துத் தெரிந்து கொண்டார். 'ஒரு வருட ஒப்பந்தம். இன்னும் ஆறு வாரம் பாக்கி இருக்கிறது என்றார் மேலாளர். "பரவாயில்லை. இந்த வாரமே அதை நிறுத்தி விடுங்கள். அந்த விளம்பரம் தந்தவர்களுக்கு கன்வின்சிங்கா ஒரு லெட்டர் எழுதி விடுங்கள்' என்று சொல்லி அனுப்பி விட்டார். சாவி நிம்மதிப் பெருமூச்சு விட்டார். 'இப்போது திருப்திதானே?’ என்று கேட்டார் பாலு. 'ரொம்ப ரொம்ப...' என்று சாவி நன்றி உணர்வோடு அவரைப் பார்த்தார். 143

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/153&oldid=824455" இலிருந்து மீள்விக்கப்பட்டது