பக்கம்:சாவி-85.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. மாமனிதர் வாசன் ஆனந்த விகடன் அதிபர் திரு. எஸ்.எஸ்.வாசன் அவர்களை அருகே இருந்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் சாவியும் ஒருவர். இது போன்ற பெரிய மனிதர்களோடு நெருங்கிப் பழகுவது என்பது அதே நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் அத்தனை பேருக்கும் கிட்டி விடுவதில்லை. நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு அரும்பெரும் சாதனைகள் படைத்தவர் வாசன். அவர் போட்டோவைப் பார்ப்பது கூட அத்தனை எளிதல்ல. சந்திரலேகா, ஒளவையார், அபூர்வ சகோதரர்கள், வஞ்சிக் கோட்டை வாலிபன், மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற மகத்தான படங்களைத் தயாரித்து வட நாட்டுப் பட முதலாளிகளையே பிரமிக்க வைத்தவர். 'வாசன் அவர்களுக்கு ஜெமினி ஸ்டுடியோ தவிர இன்னும் சில நிறுவனங்களும் சொந்தமாக இருந்தாலும் ஆனந்த விகடன் தான் அவர் உயிர் என்கிறார் சாவி. "இதை அவரே பலமுறை எங்களிடம் சொல்லியிருக்கிறார். எனினும் வாசன் அவர்களைப் பெரும் தனவந்தராக்கியது ஜெமினி ஸ்தாபனம்தான். ஆனால் அவருடைய புகழ், சமூகத்தில் உயர்ந்த இடம் இவ்விரண்டையும் பெற்றுத் தந்தது ஆனந்த விகடன்தான். ஜெமினி ஸ்தாபனம் பணத்தை வாரிக் குவித்தது. விகடன் லாபமில்லாத ஒரு தொழிலாக இருந்தது. ஆனாலும் அவருடைய காதல் எல்லாம் விகடன் பேரில்தான். அவரே தம்முடைய 144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/154&oldid=824457" இலிருந்து மீள்விக்கப்பட்டது