பக்கம்:சாவி-85.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பிடிப்புக்காகக் கேட்டு வாங்கி வந்திருந்தார்கள் - வேகமாக ஓடிய போது மலைச் சரிவில் புரண்டு கிழே விழுந்து விபத்துக்குள்ளாகி இறந்து விட்டது. அந்தச் செய்தியைத்தான் நம்பியார் வாசன் அவர்களுக்குப் போனில் சொல்கிறார். விலை உயர்ந்த குதிரை. மகாராஜாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். எவ்வளவு பண நஷ்டம்? பதறிப்போன நம்பியாருக்கு வாசன் என்ன சொன்னார் தெரியுமா? 'நம்பியார் நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன், எவ்வளவு முக்கியமான டிஸ்கவுனில் ஈடுபட்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? குதிரை செத்துப் போனால் என்ன குடியா முழுகிப் போய் விடும்? இதற்காக என்னை டிஸ்டர்ப் பண்ணணுமா? நீங்களே இதை டீல் பண்ணக் கூடாதா?’ என்று கோபமாகச் சீறிவிட்டார். நாங்கள் எல்லாம் ஆடிப் போய் விட்டோம். ஒரு விலை உயர்ந்த குதிரையின் இழப்பை, பொருள் நஷ்டத்தைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல், விகடன் பத்திரிகைக்கு, அதுவும் பேயாத ஒரு பிஸினஸுக்கு, அவர் தந்த முக்கியத்துவம் கண்டு வியப்பில் ஆழ்ந்தோம். “உழைப்பால் உயர்ந்த மாமேதை அவர் என்று அந்தரங்க சுத்தியோடு பேசும் சாவி அவர்கள் வாசன் என்று பேச்சைத் தொடங்கினாலே உணர்ச்சி வசப்பட்டுப் போகிறார். வாசன் அவர்கள் போலி கெளரவத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கியவர். அவரிடத்தில் சாவி நேசித்த பல குணங்களில் இதுவும் ஒன்று. ' சத்ய சபா என்ற அரசியல் கலப்பில்லாத ஆன்மீக அமைப்பு தொடங்கப்பட்டிருந்த சமயம். தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் கிருபானந்த வாரியாரின் கம்பராமாயணச் சொற்பொழிவு. அப்போது தமிழ்நாடு ஆளுநரான மைசூர் மகாராஜா அந்த 147

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/157&oldid=824463" இலிருந்து மீள்விக்கப்பட்டது