பக்கம்:சாவி-85.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 விழாவைத் தொடங்கி வைக்க வருகை தந்திருக்கிறார். நாதஸ்வர முழக்கத்துடன் விழா களை கட்டியிருக்கிறது. பக்தவத்சலம் அவர்கள் கொடியேற்றி வைக்க, வாரியார் சுவாமிகளின் நாற்பது நாள் ராமாயண விரிவுரை ஆரம்பம். சென்னை நகரத்தின் முக்கிய வி.ஐ.பி.க்கள் சபையில் வீற்றிருக்கிறார்கள். விழா நிகழ்ச்சி முடிந்ததும் கதை கேட்பதற்காக மைசூர் மகாராஜாவை மேடைக்குக் கீழே போடப்பட்டிருந்த பிரத்யேக நாற்காலியில் அமர வைக்கிறோம். ஆனால் மகாராஜா பக்கத்தில் சரிசமமாக அமர்ந்து உரையாடக் கூடிய தகுதி பெற்றவர்கள் யாருமே முன்வராமல் தயக்கம் காட்டுகிறார்கள். மகாராஜா மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பது என்னவோ போலிருந்தது. வேறொரு பக்கத்தில் சற்றுத் தள்ளி வாசன் அமர்ந்திருக்கிறார். நான் வாசன் அவர்களை நெருங்கிக் காதோடு விஷயத்தைச் சொல்லி நீங்கதான் மகாராஜா பக்கத்தில் உட்கார்ந்து அவருக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என்று விநயமாகக் கேட்டுக் கொள்கிறேன். "எனக்கு அவரைத் தெரியாதேப்பா..." என்று முதலில் மறுத்து விட்டவர், சற்று யோசித்து, என்னுடைய சங்கடத்தைப் புரிந்து கொண்டு 'சரி... உனக்காகப் போய் உட்காருகிறேன்' என்று சம்மதிக்கிறார். நான் வாசன் அவர்கள் பெயரை மகாராஜாவிடம் சொன்னதும் "ஒ எனக்குத் தெரியுமே தங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று தம் பக்கத்திலிருந்த நாற்காலியைக் காட்டி அமரச் சொல்கிறார் மகாராஜா. வாசன் அவர் பக்கத்தில் உட்கார்ந்ததும் பளிச்பளிச்சென்று காமிரா பிளாஷ்கள் மின்னுகின்றன. மகாராஜாவுடன் வாசன் அமர்ந்திருக்கும் போது எடுக்கப் பட்ட அந்த அபூர்வமான போட்டோவை பெரிதாக என்லார்ஜ் செய்து, ஃப்ரேம் போட்டு வாசன் அவர்களிடம் கொண்டு போய்க் காட்டினேன். வாசன் சந்தோஷப்படுவார் என்று நான் 148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/158&oldid=824465" இலிருந்து மீள்விக்கப்பட்டது